பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 - ஞானசம்பந்தர் என்பது ஐந்தாவது தேன் பிலிற்றும் நறுமணம் மிக்க செந் தமிழ் மலர். - கச்சி ஏகம்பனிடம் விடை பெற்றுக் கொண்டு கச்சி நெறிக் காரைக்காடு என்ற திருத்தலத்திற்கு வருகின்றார் காழிவேந்தர். வந்தவர் வாரணவு (3.65) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ் மாலையால் வழிபடுகின்றார். பன்மலர்கள் கொண்டடிக்கீழ் - வானோர்கள் பணிந்திறைஞ்ச நன்மையில்ா வல்லவுணர் நகர்மூன்றும் ஒருநொடியில் வின்மலையின் நாண்கொழுவி வெங்கணையா லெய்தழித்த நின்மலனார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே. (6) என்பது இம்மாலையின் நறுமணம் கொழிக்கும் ஆறாவது நன்மலர். காரைக்காட்டிறைவனிடம் விடை பெற்றுக் கொண்டு கச்சி அநேகங்காவதம்’ என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். வழிபடுகின்றார் (பதிகம் இல்லை). இத்தலத்திலிருந்து 6. கச்சி நெறிக் காரைக்காடு : (திருச் 'சாலீசுவரன் கோவில்) : காஞ்சி இருப்பூர்தி நிலையத்திலிருந்து கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். 7. கச்சி அநேகங்காவதம் : காஞ் சி இருப்பூர்தி நிலையத்திலிருந்து 1; கல் தொலைவு. இது புத்தேரித் தெரு விலுள்ளது. காஞ்சியிலுள்ள சிவாலயங்களில் அம்பிகைக்கு மூலத்தானம் இல்லை. காமாட்சியம்மன் சந்நிதி தனிக் கோயிலாக உள்ளது. சுந்தரர் பாடல் மட்டிலும் கொண்டது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/315&oldid=856293" இலிருந்து மீள்விக்கப்பட்டது