பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 - ஞானசம்பந்தர் என்பது ஆறாவது பாடல். இப்பதிகத்தில் ஏழாவது பாடல் காணப் பெறவில்லை. - மாற்பேற்று இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு திருவல்லம் வருகின்றார். வந்தவர் எரித்தவர் முப்புரம் (1.1.13) என்ற திருப்பதிகம் பாடி இறைவனை ஏத்துகின்றார். இதில், சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும்வண்ணம் நேர்ந்தவன் நேரிழை யோடுங்கூடித் தேர்ந்தவர் தேடுவார் தேடச்செய்தே சேர்ந்தவன் உறைவிடம் திருவல்லமே. (5) என்பது ஐந்தாவது பாடல். - திருவல்லத்திறைவனிடம் விடை பெற்றுக் கொண்டு இலம்பையங் கோட்டூர்' என்ற தலத்திற்கு வருகின்றார். 10. வல்லம் (திருவலம்) : அரக்கோணம் - காட்பாடி இருப்பூர்தி வழியில் திருவலம் என்ற நிலையத்திலிருந்து 1; கல் தொலைவு. நிவாநதிக் கரையிலுள்ளது. இத்தலத்தி லிருந்து 8 கல் தொலைவு சென்றால் வள்ளிமலை என்ற முருகன் தலம் உள்ளது. தினைப்புனம், நீராடிய சுனை முதலியன காணலாம். சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். 11. இலம்பையங் கோட்டுர் : சென்னை-அரக்கோணம் இருப்பூர்தி வழியில் கடம்பத்துார் (திருவள்ளுருக்கு அடுத்த நிலையம்) நிலையத்திலிருந்து 7 கல் தொலைவு. சென்னை யிலிருந்து பேருந்துமூலம் நேரே கூவத்திற்குச் சென்று, கூவம் ஏரியினுள் குறுக்கே 1 கல் தொலைவு சென்றால் இத் தலத்தை அடையலாம். ஏரியில் தண்ணிர் மிகுதியாக இருப்பின் கரை வழியே சுற்றிப் போக வேண்டும். இவ்வூரில் கிறித்தவர்களே மிகுதி. கூவத்திலிருந்து பூசை செய்யப் போகும் குருக்களோடு போய்த் திரும்புதல் வசதி. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். “. . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/317&oldid=856297" இலிருந்து மீள்விக்கப்பட்டது