பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம் 287 அடுத்து, திருப்பருப்பதத்தின்மீேது சுடுமணியுமிழ் நாகம் (1118) என்ற முதற் குறிப்புடைய பதிகம் பாடிப் போற்றுகின்றார். இதில், துறைபல சுனைமூழ்கித் தூமலர் சுமந்தோடி மறையொலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்தேத்தச் சிறையொலி கிளிபயிலுக் தேனின மொலியோவாப் பறைபடு விளங்கருவிப் பருப்பதம் பரவுதுமே. (5) 23. பருப்பதம் (துர்சைலம்): திருப்பதியிலிருந்து பேருந்து வசதியுண்டு. சிவராத்திரி சமயம் சேவிப்பது வசதி, விசயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் பல திருப்பணிகள் செய்த தலம். கடல் மட்டத்திற்கு மேல் 1563 அடி உயரம். மக்கள் மலையேறிச் சென்றவுடன் நீராடாமல் மூலத்தானத்திலுள்ள சிவலிங்கத்தைத் தழுவிச் சேவிப்பதை துளி தரிசனம் என வழங்குவர். திருநந்தி தேவரே மலையாகப் பரமசிவனைத் தாங்குகிறார் என்று புராணம் கூறும். இத்தலத்தில் மூலத்தான இலிங்கத்தைத் தொட்டு அபிடேக ஆராதனை முதலியன நாமே செய்து வழிபடலாம். கோயிலிலிருந்து 3 கல் தொலைவு செங்குத் தான இறக்கப்படிகள் வழியில் சென்றால் கிருஷ்ணை நதியை அடையலாம். சுவாமி மல்லிகார்ச்சுனேசுவர்; தேவியார் பிரமராம்பிகை, கற்பாறைகளின் நடுவில் நதி ஓடுவதால் மிக விழிப்புடன் நீராடவேண்டும். கற்பிளவுகளும் முதலைகளும் ஆபத்தைத் தரும். இலிங்கம் தரித்த ஜங்கமர் பூசையே கோவிலில் நடைபெறுகின்றது. சிவராத்திரி முதல் நாள் மாலை சென்று மறுநாள் திரும்பி விடுதல் நல்லது. அப்பர் நேரில் சேவித்த தலம். சம்பந்தரும் சுந்தரரும் காளத்தியில் இருந்தவாறே பதிகம் ۳۰ سایبر با ۹ میبر

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/328&oldid=856321" இலிருந்து மீள்விக்கப்பட்டது