பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 ஞானசம்பந்தர் என்ற முதற் குறிப்புடைய பதிகத்தைப் பாடுகின்றார். இதன் முதற் பாடல்:

  • மட்டிட்ட புன்னையங்

கானல் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான் ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய். ' (1) என்பது; ஞானசம்பந்தரின் வாக்காகிய அமுதம் குடத்தி லுள்ள அங்கத்திலே பொருந்த அவ்வெலும்பனைத்தும் ஒருருவாய் வடிவு நிரம்புகின்றது. முதற் பாடலிலேயே வடிவு பெறும் பூம்பாவை, இப்பதிகத்தின் இரண்டு முதல் ஒன்பது வரையுள்ள எட்டுப் பாடல்களைப் பாடியதும் பன்னிரண்டு வயதுடைய அழகிய மங்கையளாகின்றாள். சமணரும் சாக்கியரும் இச்செய்கை இயல்வதன்று என்று கூறுவர் என்னும் கருத்தமைய, உரிஞ்சாய வாழ்க்கை அமனுடையைப் போர்க்கும் இருஞ்சாக் கியர்கள் எடுத்துரைப்ப நாட்டில் கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சரமமர்ந்தான் பெருஞ்சாந்தி காணாதே - போதியோ பூம்பாவாய். ' (10) என்ற பத்தாம் பாடலைப் பாடிய அளவில் செந்தாமரை மலர் விரிய அதனுள்ளேயிருந்து எழும் திருமகளைப் போன்று கூப்பிய செங்கையுடன் குடம் உடைய எழுந்து வழிபட்டுத் தோன்ற அழகினுக்கு அணியாய் நிற் கின்றாள். . . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/337&oldid=856342" இலிருந்து மீள்விக்கப்பட்டது