பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 - -- ... • ஞானசம்ப்ந்தர் கின்றாள். எனவே இவளை மணத்தல் தகாது' என மறுக்கின்றார். சிவநேசருக்கும் அவர்தம் உறவினருக்கும் மறைமுறையினை எடுத்துரைத்து அவர்தம் மயக்கத்தைப் போக்குகின்றார். பிள்ளையார் செப்பிய உரை தக்கதென. உணர்ந்த சிவநேசர் பிறருக்கும் மணம் கூட்ட இசைவின்றித் தம் மகளைக் கன்னிமாடத்தே இருக்கச் செய்கின்றார். பூம்பாவையும் சிவனருளைச் சிந்தித்திருந்து சிவப்பேறு அடைகின்றாள் என்பது வரலாறு. - இந்தப் பயணத்தில் காளத்தியில் இருந்தபடியே வடநாட்டுத் திருத்தலங்களை வழிபட்டமை நினைவில் கொள்ளத்தக்கது. - - மயிலை இறைவனிடம் விடை பெற்றுக் கொண்டு திருவான்மியூர் போதருகின்றார் பிள்ளையார், இரண்டு பதிகங்களால் தலத்து இறைவனைச் சேவிக்கின்றார். விரையார் கொன்றை (3.55) என்பது ஒரு பதிகம். திே நின்னையல்லால் நெறியாது கினைந்தறியேன் ஓதி கான்மறைகள் மறையோன்தலை ஒன்றினையும் சேதி சேதமில்லாத் திருவான்மி யூருறையும் ஆதீ உன்னையல்லால் அடையாதென தாதரவே. (6) 32. வான்மியூர் (திருவாமூர்): சென்னை-சைதாப்பேட் டையிலிருந்து 4 கல் தொலைவு நகரப் பேருந்து வசதி யுண்டு. வான்மிக முனிவருக்கு திருநடனச் சேவை தந்த தலம். சப்தவிடங்கக் கணக்கில் சேராத தியாகராஜத் தலம். மூலத்தானச் சிவலிங்கத்தைக் காராம்பசு பால் சுரந்து அபிடேகிக்க, உருகியதால் மூர்த்தி அந்நிலையில் காட்சித் தருகின்றார். கடற்கரைத் தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/339&oldid=856347" இலிருந்து மீள்விக்கப்பட்டது