பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம் 301, காதில் ( 103) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடி, குன்றத்தீசனைச் சேவிக்கின்றார். வெள்ள மெல்லாம் விரிசடை மேலோர் விரிகொன்றை கொள்ள வல்லான் குரைகழ லேத்தும் சிறுத்தொண்டர் உள்ள மெல்லா உள்கி கின்றாங்கே யுடனாடும் கன்னம் வல்லான் காதல்செய் கோயில் கழுக்குன்றே. (6). என்பது ஆறாவது பாடல். ஏழாவது பாடல் காணப் பெற வில்லை. திருக்கழுக்குன்றுடையானிடம் விடைபெற்றுக் கொண்டு :அச்சிறுபாக்கம்' என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். 34. அச்சிறுபாக்கம் (அச்சரவாக்கம்) : சென்னை . விழுப்புரம் இருப்பூர்தி வழியில் அச்சரவாக்கம் என்ற நிலையத்திலிருந்து கல் தொலைவு. முப்புரம் எரிக்கச் சிவபெருமான் தேரேறிச் செல்லத் தொடங்கும்போது, தேரின் உறுப்புகளாக அமைந்த தேவர்கள், விநாயகரை வணங்காமல் இறுமாப்புக் கொள்ள, அவர்கட்கு நல்லறி ஆட்ட, விநாயகர் அருளால் தேர் அச்சு இற்று ஒடிந்தது (அச்சு.சிறுபாக்கம்). விநாயகரை வணங்கிய பின், தேர் புறப்பட்டுத் திருவதிகை சேர்ந்தது. மூலத்தான மூர்த்திகள் இருவர். முக்கியமானவர் கோபுர வாயிலுக்குச் சற்று வடபுறத்தில் நந்தி பலிபீடம் துவஜ ஸ்தம்பங்களோடு எமையாட்சீசர் அல்லது ஆட்சி கொண்டவராக விளங்கு கின்றார். கோபுர வாயிலுக்கெதிரிலுள்ளவர் உமையாட் சீசர் எனப்படுகின்றார். இவற்றுள் ஆட்சி கொண்ட மகா தேவர் என்பதே சுவாமி பெயர். சம்பந்தர் தேவாரம் மட்டிலும் பெற்ற தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/342&oldid=856355" இலிருந்து மீள்விக்கப்பட்டது