பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 ஞானசம்பந்தர் பொன்றிரண்டன்ன (1.77) என்ற முதற்குறிப்புடைய பதிகம் பாடி இறைவனை ஏத்துகின்றார். தேனினும்இனியர் பாலனநீற்றர் தீங்கரும் பனையர்தங் திருவடி தொழுவார் ஊனயந்துருக உவகைகள்தருவார் உச்சிமேல் உறைபவர் ஒன்றலா தூரார் வானகமிறந்து வையகம்வணங்க வயங்கொள நிற்பதோர் வடிவினை யுடையார் ஆனையின் உரிவை போர்த்தவெம் அடிகள் அச்சிறுபாக்கம் ஆட்சிகொண் டாரே. (2) என்பது இரண்டாம் பாடல். அச்சிறுபாக்கத்து இறைவனிடம் விடை பெற்றுக் கொண்டு அரசிலி' என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். :பாடல் வண்டறை (2.98) என்ற முதற் குறிப்புடைய பதிகம் பாடிப் பரமனை ஏத்துகின்றார் - மானஞ்சும் மடகோக்கி மலைமகள் பாகமு மருவித் தானஞ்சா வரண்மூன்றுங் தழலெழச் சரமது துரந்து வானஞ்சம் பெருவிடத்தை யுண்டவன் மாமறை யோதி ஆனஞ்சாடிய சென்னி யடிகளுக் கிடம்அர சிலியே. (5) என்பது ஐக்தாவது பாடல். அரசிலி அரனிடம் விடை பெற்றுக் கொண்டு "புறவார் பனங்காட்டுர்' என்ற திருத்தலத்துக்கு வருகின்றார். 35. அரசிலி (ஒழுந்தியார்பட்டு) : புதுச்சேரியிலிருந்து 7 கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். - 35. புறவார்பனங்காட்டுர் (பனையபுரம்): விழுப்புரம். எழும்பூர் இருப்பூர்திப் பாதையில் முண்டியம்பாக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/343&oldid=856357" இலிருந்து மீள்விக்கப்பட்டது