பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம் 303 நடுநாட்டுத் தலம், நடுநாட்டுத் தலப் பயணத்தின்போது இத்தலம் சற்று விலகியிருந்தபடியால், அப்போது சேவிக்காமல் இப்போது சேவிக்கின்றார். விண்ணமர்ந்தன: {2.33) என்ற முதற்குறிப்புடைய பதிகம்பாடி இறைவனை வழுத்துகின்றார். இதில், கீரினார்வரை கோலிமால்கடல் டிேய பொழில்சூழ்ந்து வைகலும் பாரினார் பிரியாப் புறவார் பனங்காட்டுர்க் காரினார்மலர்க் கொன்றை தாங்கு கடவுள் என்று கைகூப்பி காள்தொறும் சீரினால் வணங்குந் திறத்தார்க் கருளயே {6} என்பது ஆறாவது பாடல். புறவார் பனங்காட்டுர் இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு கோயில் (சிதம்பரம்) வருகின்றார். இத்திருக் கோயில் பெருமானை வழிபட்டபின் அவரிடம் விடை பெற்றுக் கொண்டுதான் நடுநாட்டுத் தல வழிபாட்டைத் தொடங்கி அதை நிறைவு செய்து கொண்டு, தொடர்ந்து தொண்டை நாட்டுத் தல வழிபாட்டைத் தொடங்கி அதையும் நிறைவு செய்து கொண்டு பயணம் தொடங்கிய இடத்திற்கே வந்து சேர்கின்றார். எங்கும் சுற்றி அரங்கனைச் சேர்ந்த மாதிரி' என்று வைணவர்கள் கூறும் மரபு ஒன்று உண்டு. எல்லாப் பெருமாள்களிலும் கோயில் {அரங்கம்) பெருமாளே ஆதிப் பெருமாள் என்பது அவர்கள் கொள்கை, இதை நினைவூட்டவே அவர்கள் இப்பழமொழி யைக் கூறுவர். சைவர்கட்கும் கோயில் (சிதம்பரம்) என்பது சிறப்பான தலம். மூவர் முதலிகளும் மணிவாசகப் பெருமானும் அதிகமாக ஈடுபட்ட தலம் கோயில். ஆகவே, சம்பந்தரும் எங்கும் சுற்றி அரங்கனைச் சேர்ந்த மாதிரி தில்லைக் கூத்தனிடமே வந்து சேர்கின்றார். நிலையத்திலிருந்து 1 கில் தொலைவு. சம்பந்தர் தேவாரம் மட்டிலும் பெற்ற தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/344&oldid=856358" இலிருந்து மீள்விக்கப்பட்டது