பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxii கள்), கொல்வி (4 கட்டளைகள்), கொல்லிக் கெளவானம் (4 கட்டளைகள்), பஞ்சமம் (யோப்பு வகைகள்), சாதாரி (5 யாப்பு விகற்பங்கள்), பழம்பஞ்சுரம் (8 யாப்பு வகைகள்): புற நீர்மை (ஒரே கட்டளை), அந்தாளிக் குறிஞ்சி (ஒரே கட்டளை அமைப்பு) என்ற எட்டு பண்கள் மூன்றாம் திருமுறையிலும் அமைந்துள்ளன. அதிகாலையில் (4 மணிக்கு) எழுந்து உலகம் முழுதும் உறங்கிய நிலையில் இருக்கும்போது இவர்தம் திருப்பாடல்களை வாய்விட்டுப் படித்தால் நம் ஒலியே நம் காதின்மூலம் சென்று நம் மனத்தை உருக்கும். கண்ணீர் ஆறாகப் பெருகும். இதை அநுபவத்தில் கண்டு மகிழ்கின்றேன். உடனே இப் பெருமான்பற்றியும் நூல் எழுதத் துணிந்தேன். நூலும் ஞானசம்பந்தர் என்ற திருப்பெயருடன் மார்க்கண்டேயர் வயதைப் போல 15 இயல்களில் நிறைவு பெற்றது. சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணத்தில் காட்டியுள்ள வழியைக் கடைப்பிடித்துக் கொண்டு. அவருடன் மேற்கொண்ட கற்பனைப் பயணத்தின் விளைவாக இந்நூல் உருவாகியது. இதற்குப் பேராசிரியர் க. வெள்ளைவாரணனாரின் பன்னிரு திருமுறை வரலாறு (இரண்டு பகுதிகள்) என்ற நூல் கைகொடுத்து உதவியது. 4. பழம்பஞ்சுரம் என்ற பண் திருமுறைகண்ட புராணத்தில் ஞானசம்பந்தர் தேவாரப் பதிகங்களுக்கு உரியதாகக் கூறப்பெறாமையால் இப்பண்ணுக்குரிய 100 முதல் 116 வரையுள்ள பதிகங்களையும் முன்னுள்ள 67 முதல் 99 வரையமைந்த பதிகங்களுடன் சேர்த்துச் சாதாசிப் பண்ணுக்கு உரியனவாகக் கொண்டு சாதாரிக்கு ஒன்பது எனத் திருமுறைகண்ட புராணம் கூறியபடி 9 கட்டளைகளாக அடக்குவர் யாழ் நூலாசிரியர் (யாழ் நூல்-பக். 24.5.246). 5. பன்னிரு திருமுறை வரலாறு-பகுதி 1, பக். (354. 391)இல் விவரம் காண்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/35&oldid=856369" இலிருந்து மீள்விக்கப்பட்டது