பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3]{} ஞானசம்பந்தர் திருமணக் கோலம் கொண்டதையும் அவர் சிவிகை மீதமர்ந்து அவர் தெருவில் உலா வரும் காட்சியையும் சேக்கிழாரின் தெய்வத் தமிழில் படித்து அநுபவிக்க வேண்டும். மணமகனாகிய காழிப் பிள்ளையார் முத்துச் சிவிகையின் மீதமர்ந்து மங்கல வாத்தியம் முழங்க திருவீதியில் உலா வருங்கால் மறையவர்கள் மறை முழக்கம் செய்து வருகின்றனர். திருமணப் பந்தர் முன் வருங்கால் மங்கையர் மணப் பொருளை ஏந்தி எதிர்கொண்டு வரவேற்கின்றனர். பிள்ளையார் சிவிகையை விட்டிறங்கித் திருமணப் பந்தரில் இடப்பெற்றிருக்கும் பொற்பீடத்தில் அமர்ந்தருளுகின்றார். அப்பொழுது நம்பாண்டார் நம்பி தம் துணைவி யாருடன் பிள்ளையாரின் திரு முன்பு வந்து மணமகனின் திருவடிகளைத் தூய நீ ரா ல் விளக்கி அந்நன்னீரை உட்கொள்ளுகின்றார்; சுற்றத்தார் மேலும் தெளிக் கின்றார். பிள்ளையாரைப் புரிசடையான்" என்றெண் ணிையே திருவடிகளை விளக்கினார் என்கின்றார் சேக்கிழார் பெருமான்; பிள்ளையார் கையில் மங்கலநீர் சொரிந்து, என்றன், அருநிதிப் பாவையாரைப் பிள்ளையார்க்கு அளித்தேன்' என்று தாரை வார்த்துத் தருகின்றார். மங்கல மகளிர் மணமகளை அழைத்து வந்து பிள்ளை யாரின் வலப்பக்கத்தில் அமரச் செய்கின்றனர். மணமக்கள் அமர்ந்திருந்த காட்சி வெள்ளை மேகமோடு மின்னுக் கொடிபோல் இருந்தது' என்கின்றார் சேக்கிழார் பெருமான். - - திருநீல நக்க நாயனார் திருஞானசம்பந்தர் முன்பிருந்து கண்ணுதலப்பனை இறைஞ்சி வேத விதிப்படித் திருமணச் சடங்குகளை நிகழ்த்தி வைக்கின்றார். நல்லோரை வரும் நேரத்தில் மங்கலநாண் பூட்டப்பெறுகின்றது. கூடியிருந்த பெருமக்கள் யாவரும் கண்ணிமையாது அட்சதை, மலர்கள் 6. பெ. பு: ஞானசம்பந். 1210 - 1230.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/351&oldid=856373" இலிருந்து மீள்விக்கப்பட்டது