பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 ஞானசம்பந்தர் (எ.டு.) செற்றமில் சீரானைத் திருவாப்ப னுாரானைப் பற்றும் மனமுடையார் வினையற் றறுப்பாரே, (1.88: 1) என்பதுபோல் உள்ளவை. 6. இறைவன் இன்ன இன்ன தலங்களில் இன்ன இன்ன தன்மையில் விளங்கி அருள் புரிகின்றான் எனக் கூறும் முறையில் அமைந்தவை சில பதிகங்கள். (எ.டு.) வேத மோதி வெண்ணுரல் பூண்டு வெள்ளை எருதேறிப் பூதம் சூழப் பொலிய வருவார் புலியின் உரிதோலார் காதா எனவும் கக்கா எனவும் கம்பா எனகின்று பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் . பழந் நகராரே. - (1.67: 1) என்பதுபோல் உள்ளவை. 7. ஒரு தலத்தினை அடையும் நிலையில் அதன் சேய்மையிலும் அணிமையிலும் நின்று அத்தலத்தினைக் கண்டு போற்றியனவாகச் சில பதிகங்கள் காணப் பெறுகின்றன. (எ.டு.) உண்ணாமுலை யுமையாளொடு முடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும் அண்ணாமலை தொழுவார் வினை . வழுவாவண்ண மறுமே. (1.10: 1) என்பதுபோல் உள்ளவை. . 8. ஒரு தலத்தை வழிபட்டுத் திரும்பும் நிலையில் அங்கே கண்ட தெய்வக் காட்சியினைத் தம் உள்ளத்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/363&oldid=856400" இலிருந்து மீள்விக்கப்பட்டது