பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் வளர்ப்பும் 13. தலால் சம்பந்தர் பொற்றாளம் பெற்ற அருட்செயல் உலகமக்கள் கண்காண நிகழ்ந்ததென்பது தெளிவாகின்றது. சீகாழியில் திருமுலைப்பால் உற்சவத்தன்று ஞான சம்பந்தரைத் திருக்கோலக்காவிற்கு எழுந்தருளச் செய்து தாளம் வாங்கிச் செல்வதாக உற்சவம் இன்றும் நடைபெற்று வருகின்றது. திருக்கோலக்காவில் பொற்றாளம் பெற்ற காழப பிள்ளையார் சீகாழிக் கோயிலையடைந்து ‘பூவார் கொன்றை" (1.24) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ்ப் பதிகம் பாடிக் காழிப் பெருமானைப் போற்றுகின்றார். இதில், கொங்கு செருக்தி கொன்றை மலர்கூடக் கங்கை புனைந்த சடையார் காழியார் அங்கண் அரவம் ஆட்டும் அவர்போலாம் செங்கண் அரக்கர் புரத்தை எரித்தாரே. (6}. என்பது ஆறாவது பாடல். பின்னர் திருக்கோயிலிலிருந்து திரும்பித் தம் திருமாளிகை வந்து தங்குகின்றார். சம்பந்தர் வாழ்க்கையை நோக்கும்போது மற்றைய நாயன்மார்களைக் காட்டிலும் இவர் ஒருவரே சமண சமய எதிர்ப்பில் ஈடுபட்டுச் சோழ, பாண்டி, தொண்டை நாடு களில் அவர்கள் சமயத்தின் குறைபாடுகளை எடுத்துச் சொல்வியும் அவர்களைப்போல் அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டியும் மக்களை முன்போல் சைவத்திற்குத் திருப்பி யவர் என்ற உண்மையைக் கண்டு தெளியலாம். இவருக்குத் துணையாகப் பல போதகர்கள் இவருடன் சென்றிருக்க வேண்டும். இவர்கள் சம்பந்த சரணாலயர்' என்று வழங்கப்பெறுகின்றனர். சம்பந்தர் வரலாற்றை விரிவாக அறிந்து கொள் வதற்கு 4286 செய்யுட்களையுடைய பெரிய புராணத்தில் 1256 செய்யுட்களையுடைய திருஞான ச ம் ட ந் த ர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/58&oldid=856493" இலிருந்து மீள்விக்கப்பட்டது