பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3& ஞானசம்பந்தர் சண்டை நகருக்கு வருகின்றனர். காழிப்பிள்ளையாரும் பெரும்பாணரின் பெரும் புகழைக் கேள்விப் பட்டிருந் ஆவாரகையால், அவரை எதிர்கொள்ளத் தயாராக இருக் கின்றார். பாணர் உடனே சிவக்கன்றின் திருவடியில் விழ்த்து வணங்கி நிற்கின்றார். பின்னர் இருவரும் திருத்தோணிபுரத் திருக்கோயிலுக்குச் சென்று தோணி யப்பரை வழிபடுகின்றனர். பின்னர் இருவரும் கோயிலின் புறமுன்றிலுக்கு வரு கின்றனர். பிள்ளையார் பாணரை நோக்கி, ஐயா, இசையமைத்த யாழினை உங்கள் இறைவர்க்கு இயற்று பின் என்து பிள்ளையார் பணித்தருள, பாணரும் பிள்ளையாரைத் தொழுது தந்திரியாழினை வீக்கி இசையாராய்ந்து இறைவனுக்குரிய பாணியினை ஏழிசை அல்ல தம் துணைவியாருடன் பாடுகின்றனர். யாவரும் இந்த இசையடிதத்தைச் செவியால் பருகி மகிழ்கின்றனர்; கவுணியக் கன்று இதனை மெச்சிப் பாரட்டுகின்றார். அாழிப்பிள்ளையார், பாணரும் அவர்தம் பத்தி னியாரும் தங்குதற்கேற்ற தனி இல்லம் அமைத்துத் தந்து நல்விருந்து அளித்து மகிழ்கின்றார். பின்னர் பிள்ளையார் அதுகாறும் பாடியருளிய திருப்பதிகங்களைக் கேட்டு உளம் உருகு கின்றார்; அவற்றைத் தம் யாழின் முறைமையில் வாசித்து என்வுயிரும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்து திளைக்குமாறு சேய்கின்றார் ஏழிசையும் பணி கொண்ட திருநீலகண்ட யாழ்ப்பானர். இதன் பின்னர் பாணர் பிள்ளையாரை நோக்கி, சுவாமி, தங்கள் இசைப்பாடலுக்கு அடியேன் யாழ் வாசிக்கும் பணியை நிரந்தரமாகவே வேண்டு கின்றேன்” எனக் கேட்க, சம்பந்தப் பெருமானும் அதற்குச் சம்மதம் தெரிவிக்கின்றார். அன்று முதல் பெரும்பானர் சம்பந்தர் அருளிச் செயல்கட்கு யாழ்வாசிக்கும் வழக்கம் நிலைபெற்று விடுகின்றது. - பயனத் தொடக்கம்: ஒரு நாள் தில்லைச் சிற்றம் பலப் பெருமானை வழிபடவேண்டும் என்ற எண்ணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/75&oldid=856523" இலிருந்து மீள்விக்கப்பட்டது