பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் தல வழிபாடு 35 பாடி னாய்மறை யோடுபல் கீதமும் பல்சடைப் பணிகால்கதிர் வெண்டிங்கள் சூடி னாயரு ளாய்சுருங்க எம் தொல்வினையே. (1) என்பது முதல் வாடா நறுமலர். இதன் மூன்றாவது பாடலில் தாம் தில்லைவாழ் அந்தணர்களைச் சிவகண நாதர்களாகக் கண்ட காட்சியினைப் பிள்ளை யார் தெளிவாக விளக்கியுள்ளமை கண்டு மகிழலாம். தொடரும் பயணம்: ஒருநாள் திருநீலகண்டப் பெரும் பானர் பிள்ளையாரை வணங்கிப் பணிந்து, அடியேன் பதி முதலாக வெள்ளாற்றின் (நிவாநதிக்) கரையிலுள்ள திருத்தலங்களைப் பணிந்திடல் வேண்டும்' என வேண்டு ஒன்றார்; அதற்குப் பிள்ளையாரும் இசைந்தருள்கின்றார். இருவரும் அடியார்கள் குழாத்துடன் மேற்கு நோக்கிப் ப ய ண த் ைத த் தொடர்கின்றனர்; திருவெருக்கத்தம் புலியூர் எல்லையை அடைகின்றனர். இந்நிலையில் பெரும் பானர் பிள்ளையாரை வணங்கி, கார், நெருங்கு சோலை சூழ் இப்பதி அடியனேன் பதி' என்கின்றார். இதனைக் கேட்டு மகிழ்ந்த பிள்ளையார், 'ஐயர், நீர் அவதரித்திட்ட இப்பதி அளவில் மாதவம் முன்பு செய்தது' எனச் சிறப் புரைத்து அருளுகின்றார். எருக்கத்தம்புலியூர் என்றால் இப்போது பலருக்குத் தெரியாது. இராஜேந்திரப் பட்டணம் என்றால்தான் தெரியும். முன்னொரு காலத்தில் நைமிசாரண்ய முனிவர்கள் இங்கு மரங்கள் வடிவமெடுத்து நின்று தவஞ் செய்தனர் என்றும், இந்த உண்மை அறியாத வேட்டுவர் அந்த மரங்களை வெட்ட முயன்றனர் என்றும், இதை 6. கண்ணன் துரது சென்றபோது விதுரன் மனைக்கு ஏகுகின்றான். விதுரன், நீ எய்தற்கு, என்ன மாதவம் செய்தது இச்சிறு குடில்!" என்கின்றான் (கிருட்டிணன் துரது-78). இந்த நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டு மகிழ்தல் தகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/80&oldid=856538" இலிருந்து மீள்விக்கப்பட்டது