பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88


அடிகளார் திருச்சியில் இருந்த அப்போது ச. அரங்க நாத'முதலியாரும் கர. ஆதிலட்சுமி அம்மையாரும் திருச்சி யில் இருந்தனர். அவர்கள் தம் மகள் காமாட்சிக்குத் திருச்சியில் அடிகளாரின் முன்னிலையில் திருமணம் நடத்த வேண்டும் என வேண்டிக் கொண்டனர். அடிகளாரும் திருவுளங் கொண்டார். மற்றும், காமாட்சியம்மையார் திருமணம் (காஞ்சி காமாட்சியம்மை திருமணம்) என்னும் கட்டுரை ஒன்று வரைந்து தந்து அச்சிடவும் ஏற்பாடு செய் தார்.

இடையிலே, காமாட்சியின் திருமணத்திற்கு முன்பு பழநி சென்று தைப்பூசத்தில் முருகனை வணங்கி வந்துவிட லாம் என்று கருதி அன்பர்களின் வேண்டுகோட்கு இணங் கப் பழநிமலை நோக்கிப் புறப்பட்டார் அடிகளார். திரு வண்ணாமலையை அடுத்துத் திருச்சிராப்பள்ளி மலை, அதை அடுத்துப் பழநி மலைப் பயணம் நேரிட்டது.

19-1-1942 - திங்கட் கிழமை காலையில் அடிகளார் திருச்சியினின்றும் புறப்பட்டார், மணப் பாறை வழியாகச் சென்று 23-1-1942 - வெள்ளிக்கிழமை பழநியைச் சேர்ந் தார். அன்பர்களின் வரவேற்பு ஆரவாரமாயிருந்தது; அவ கங்கைச் சமீன்தாரின் மாளிகையில் அடிகளாரை எழுந் தருளச் செய்தனர்.

பழநி சைவ சித்தாந்த சபையின் முதல் ஆண்டு விழா விற்கு அடிகளார் தலைமை தாங்கி நடத்திக் கொடுத் தார். நாடோறும் விழாச் சொற்பொழிவும் ஆற்றி அன்பர் களை மகிழ்ச்சி வெள்ளத்தில் 'ஆழ்த்தினார். 30-1-1942 ஆம் நாள் பழநி மலைமீது ஏறிப் பழநியாண்டவரை வழி பட்டார்.

மறுநாள் - 31-1-1942 - சனிக்கிழமை மாலை சாது சுவாமிகள் என்பவரின் வேண்டுகோளின் வண்ணம் சிவ