பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 ராச யோகம் என்னும் பொருள் பற்றி நீண்டதொரு - நீண்டதொரு - ஆமாம் நீண்டதொரு சொற்பொழிவு ஆற்றினார் அடிகள் இரவு 9-30 மணிக்குச் சொற்பொழிவு நிறை வெய்தியது. இது இறுதிச் சொற்பொழிவாயிருக் குமோ...? அதன் பின்னர் அடிகளார் மலைமீது ஏறி பழநியாண்ட வரை வழிபட்டு இரவு பன்னிரண்டு மணி அளவில் கீழிறங் கித் தங்கும் விடுதியை அடைந்தார். விரைவில் திருச்சி சென்று காமாட்சியின் திருமணத்தை நடத்தித்தர வேண்டு மென எண்ணி, அன்று நள்ளிரவு மூன்று மணிக்கே புறப் படுதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்தார். அன்றிரவு தூக்கமே இல்லை. அடிகளார் புறப்பட்டு விட்டார். திருக் கோயில் மேலாளர் எம். சோம சுந்தரம் பிள்ளையும் மற்ற அன்பர்களும். அந்த நள்ளிரவில் மேளதாள இயங் களுடன் பழநி நகர எல்லை வரையும் வந்து வழியனுப்பிச் சென்றனர். அடிகளார் பழநி மலையை நோக்கினாற் போல் பல்லக்கில் அமர்ந்து பயணம் செய்வாராயினார் - ஆமாம் பயணமே செய்வாராயினார். பல்லக்கும் பொருள் கள் ஏற்றிய வண்டியும் முன்பின்னாகச் சென்று கொண்டி ருந்தன. திங்களோ தை - நேரமோ வைகறை - குளிரோ மிகுதி. அடிகளார் மிகவும் நலிவுற்றார். கடையெழு வள்ளல்களுள் ஒருவரான ஆய்’ என்பான் ஆண்ட 'ஆய்குடி என்னும் ஊர் வழியாகச் சிவிகை சென்று கொண்டிருந்தது. பழநிக்கு 13 கி.மீ. தொலைவில் உள்ள சிந்திலவாடன்பட்டி என்னும் ஊரை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அடிகளார் நிலை தளர்ந்து பல்லக்கை நிறுத்தச் சொன்னார். வெந்நீர் சுட வைக்கப் பெற்றது. அடிகளார் காலைக் கடனை முடித்துச் சிறிது வெந்நீர் பருகிப் பல்லக்கில் அமர்ந்தார். உடல் நிலை