பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ளாக்கி அடிகளாரிடம் காணிக்கையாகத் தந்தார். அந்தப் படங்கள் திருக்கோவலூரிலும் திருப்பாதிரிப்புலியூரிலும் உள்ள அடிகளாரின் அருளகங்களில் இப்போதும் காட்சி யளித்துக் கொண்டுள்ளன. அடிகளார் சென்னை சொற்பொழிவுகளை முடித்துக் கொண்டு சென்னையினின்றும் புறப்படுகையில், சென்னைகோகலே மண்டபத்தில் அடிகளார்க்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப் பெற்றது. அவ்விழாவில், ஆர்க் காட்டு இரட்டையர்களுள் ஒருவரும் பற்பல பெரிய பதவி களை வகித்தவருமாகிய ஏ, இராமசாமி முதலியார் அடி களைப் பாராட்டி ஆங்கிலத்தில் ஒரு சொற்பெருக்கு ஆற்றினார். பிரிவோம்பல் இதழ் (பிரிவுபசாரப் பத்திரம், ஒன்றும் அடிகளார்க்கு அளிக்கப் பெற்றது. காடிமுத்துப் பிள்ளை ஆ. சிவலிங்கம், க. செந்தில் நாயகம், மா. தண்ட பாணி, சு. சண்முகம் (சுந்தர சண்முகம்) என்னும் நால்வ ரும் புலிசை ஞானியார் அருளகத்தில் கல்வி கற்றபின், திருவையாறு - அரசர் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்காக 1936 சூலையில் சென்றனர். திருவையாறு சென்றனர். இவர்கட்குள் செந்தில் நாயகம் தவிர்,மற்ற மூவர்க்கும் போதிய அகவை இல்லை 67675 கூறிச் சேர்த்துக் கொள்ள மறுத்தனர். இவர்களை அழைத்துச் சென்ற வீட்டுப் பெரியவர்கள், சேர்க்கமாட்டேன் என்கிறார்கள். வாங்க - ஊருக்குப் போகலாம் என்றழைத்தனர். ஓரிடத்தில் கொட்டி வைத் திருந்த மணலில் விளையாடிக் கொண் டிருந்த இந்த இளைஞர்களுள் சு.சண்முகம் என்பவன் தவிர மற்ற இருவரும் புறப்பட்டனர். சு. சண்முகம் மட்டும் கல்லூரியில் சேர்க்காவிடின் காவிரியில் விழுந்து செத்து விடுவேன்' என்று அடம்பிடித்தான். இதையறிந்த கல்லூரி முதல்வர், மூவரையும் பெயர் எழுதாமல் வகுப்