பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 நாள் ஆக ஆக இவ்வெண்ணம் வளர்ந்ததே யன்றிக் குறைந்ததன்று. வித்துவான் தேர்வுக்குத் தனித்துச் (Private) செல் வோருக்கு ஆண்டுகள் இருபத்தைந்து நிறைந்திருத்தல் வேண்டும் என்பது சென்னைப் பல்கலைக் கழகச் சட்ட மாகும். முதலில் தேர்வுக்குரியவற்றைக் கற்று முடிந்த காலத்தில் அடியேன் பதினெண் யாண்டுகளே நிறைந் திருந்தேன். முற்குறித்த சட்டப்படித் தேர்விற்குச் செல்லும் தகுதி, வயதால் எனக்கில்லை. ஆயினும், ஆண்டு குறை வினையுடையாரையும் பல்கலைக் கழகத்தார் விரும்பின் சட்டத்தைச் சிறிது தளர்த்தித் (Exempt) தேர்விற்குச் செல்லுமாறு செய்யலாம் என்ற உண்மை அறியப்பட்டது. அக்காலத்து அடியேனுடன் மற்றொரு மாணவியாரும் அடிகளிடத்துத் தமிழ் கற்றுக்கொண்டிருந்தனர்.அன்னார்க் கும் ஆண்டுத் தொல்லை குறுக்கிட்டது. ஆதலின் நாங்கள் இருவரும் அவ்வைந்து வெண்பொற் காசுகளைச் செலுத் தித் தேர்வுக்கு உரியவர்களாக ஆக்கப்படல் வேண்டு மென்று பல்கலைக் கழகத்தாரைக் கேட்டுக் கொண்டோம். 1934 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் இது நடந்தது. நவம்பர் மாதம் (ஐந்தாம் நாள் என்று நினைவு) காலை வழக்கம் போல் 9.30 மணியளவிற்கு மடாலயத் திற்குச் சென்றேன். முன்னருள்ள மண்டபத்தில் திரு. உருத்திரசாமி ஐயரவர்கள் இருந்தனர். என்னுடன் பயின்ற மாணவியாரும் அங்கிருந்தனர். என்னைக் கண்ட ஐய ரவர்கள்,"உனக்கு வரவில்லை-இவர்களுக்கு வந்துவிட்டது: என்றனர். யான் ஒன்றும் அறியாதவனாய்ச் சிறிதுஎண்ணி நின்றேன். அந்த மாணவியார் தேர்விற்குச் செல்லலாம் என்று பல்கலைக் கழகத்தார் அனுப்பிய முடிவினை ஐயர் என்கையில் தந்தனர். உண்மை நன்றாக விளங்கிற்று.