பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 திங்கள் தண்கயம் போல’ (புறநானூறு-70-6), தையும் மாசியும் வையகத்து உறங்கு (ஒளவையாரின் கொன்றை வேந்தன்) முதலிய செய்யுட்பகுதிகள் நினைவிற்கு வரு கின்றன. தைத் திங்கள் அவ்வளவு தண்ணிய குளிர்ச்சி உடையதாம். அந்தத் தைத் திங்கள் குளிரில் இரவில் மூன்று மணிக்கு, ஜே.எம். சோமசுந்தரம் பிள்ளை முதலிய அன்பர்கள் பழநி நகர் எல்லை தாண்டும் வரையும் மேளதாள இயங்களுடன் வந்து அடிகளாரை வழியனுப் பினர் எனில், அடிகளாரின் பெருமைக்கு அளவே இல்லை யன்றோ? அடக்கம் காணும் அவா ஞானியார் அடிகளார் 2 2 1942 ஆம் நாள் வண்டிப் பாளையம் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அவ்வடக்கத்தைக் கண்டு வணங்க வெளியூர் அன்பர்கள் பலரும் தமிழறிஞர்கள் பலரும் தொடர்ந்து'வந்து கண்டு வணங்கிச் சென்றனர். இது தொடர்பாக யான் பட்டறிந்த இரண்டு நிகழ்ச்சிகள் வருமாறு: மயிலம் மடத்தின் மூல ஆதீனமான பொம்மைய பாளையம் என்னும் ஊரில் 1942 வைகாசியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்குச் சென்னை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வந்திருந்தார். யானும் சென்றிருந்தேன். நிகழ்ச்சி முடிந் ததும், ஞானியார் அடிகளாரின் அடக்கத்தைக் காண வேண்டும் என இராசமாணிக்கனார் என்னிடம் கூறினார். யான் அவரை வண்டிப் பாளையம் அழைத்துச் சென்று. அடிகளாரின் அடக்கத்தைக் காண்பித்தேன் அவர் அன் புடன் உருகி வணங்கினார். அதே 1942 கோடை விடுமுறையில் புதுச்சேரிக் கல்விக் கழகத்தின் ஆண்டு விழாச் சொற்பொழிவிற்காக டாக்டர் வ.சுப. மாணிக்கம் வந்தார். யானும் கலந்து