பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

İÍÜ வருவதால் எண்ணற்ற மக்கள் அடிகளாரின் சொல்லமிழ் தத்தை அருந்தும் வாய்ப்பு இல்லாதவராயுள்ளனர். என் போன்றோரும் சிலர் ஊர்மக்களும் அடிகளாரின் உரையை விரும்பிக் கேட்பது போலவே பல ஊர் மக்களும் கேட்டு மகிழ விரும்புவார்கள் அல்லவா? அடிகளார் சிவிகையிலேயே செல்லுவதால், தொலை வில் உள்ள ஊர்கட்கெல்லாம் - வேண்டியபோதெல்லாம் விரைந்து செல்ல முடியவில்லையே! இன்னும் அடிகளார் சென்னைச்கு வரவே இல்லையே. அடிகளாரின் சொல் உணவை மாந்தித் திளைக்கச் சென்னை மக்கள் மிகவும் ஆவலாய் உள்ளனர். கப்பலில் செல்வதென்றால், தமிழர் கள் வாழும் வெளி நாடுகட்கும் செல்லலாமே. தொலை வில் வாழும் தமிழர்கட்கும் இந்த நல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டுமே. வெளிநாடுகட்குச் செல்லாவிடினும் உள்நாடு முழுவதற்குமாவது சென்று வரவேண்டும். பழைய மரபுப் படி சிவிகையை விடமுடியாது எனில், யாங்கள் பெரிய மோட்டார் கார் அமைத்து அதன்மேல் சிவிகையை வைக்க ஏற்பாடு செய்வோம். அடிகளார் சிவிகையில் அமர்ந்த படியே மோட்டார் வண்டி மூலம் இடம் விட்டு இடம் போகலாம். இந்த வேண்டுகோளை அருள்கூர்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும்” - என்று வேண்டுகோள் விடுத் தார். திரு வி.க. வின் வேண்டுகோளைக் கேட்ட அடிகளார் பின்வரும் கதையைக் கூறித் தமது இயலாமையைத் தெரி வித்தார். 'ஒரு நாட்டில் வயது முதிர்ந்த அரசன் ஒருவன் ஆண்டு கொண்டிருந்தான். அவன் மகனுக்கு விரைவில் தான் அரசனாக வேண்டுமென்ற அவா மிக்கது, தந்தையோ விரைவில் தலையைக் கீழே போடுவதாகத் தோன்றவில்லை.