பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 அடிகளார் சிறப்பை அறிந்த சமீன்தார், தமது நினை வாக அடிகளார்க்கு அழகிய பெரிய சிவிகை ஒன்றைச் செய்து தந்தார். அதனை இப்போதும் புலிசை அருளகத் தில் காணலாம். & இரு மாதர் ஒருமுறை திருக்கோவலூரில் அடிகளார் தலைமையில் 'தியாகி' இதழ் ஆசிரியர் இராம. சடகோப ஐயங்கார். 'இராமர் புருஷோத்தமர் என்னும் பொருள் பற்றிச் சொற்பொழிவாற்றினார்.அவர் தமது பொழிவில், இராமர் ஒரே சொல்லும் ஒரே வில்லும் ஒரே இல்லும் உடையவர்: ஒரே இல் (மனைவி) உடையவர் என்பதற்குச் சான்றாவது இலங்கை அசோக வனத்தில் சீதை இருந்தபோது, அங்கு. வந்த அநுமனிடம், 'வந்தெனைக் கரம் பற்றிய வைகல்வாய் இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தை யாலும் தொடேன் என்ற செவ்வரம் தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்” என்னும் உரையே யாகும்-என்று ஒரு கருத்துக் கூறினார். 'இரு மாதர்' என்பதற்கு இரண்டு பெண்கள் என்று பலரும் பொருள் கூறுவர். இரு மாதரைத் தொடேன்’ என்பது உன்னைத் தவிர இரண்டாவது பெண்ணைத் தொடேன் என்ற கருத்தை உணர்த்த முடியாது. இரண்டு மாதர் என்பது வேறு, இரண்டாவதுமாதர் என்பது வேறு இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு, அடிகள் பின்வருமாறு முடிவுரையில் அறிவித்தார்: 'ஆடவருள் சிறந்தவராகிய இராமர், இரண்டாவது பெண்ணைத் தொடேன் என்று கூறல் அவ்வளவு சிறப்பா காது. அவர்மேல் சீதை ஐயங்கொண்டு, இரண்டாவது