பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 சிறு மொழியும் இடம் பெற்றது. அம்மொழியில் இரண் டொரு பகுதியை அகழ்ந்து ஈண்டுத் தருகிறேன். அஃது ஈண்டைக்குப் பொருத்த மாகும்........ ... ஞானியார் சுவாமிகள் மாணாக்கருக்குப் பாடம் சொல்லும்போதும் சொற்பொழிவு நிகழ்த்தும் போதும் தொல்காப்பியனாராகவும் - நக்கீரராகவும் - திருவள்ளுவ ராகவும் - இளங்கோவடிகளாகவும் - கச்சியப்பராகவும் - கம்பராகவும் - சேக்கிழாராகவும் - வியாசராகவும் - நீல கண்டராகவும் - சிவஞான முனிவராகவும் - பிறராகவும் முறை முறையே விளங்கி விளங்கி இலக்கிய இலக்கணச் சாத்திர நுட்பங்களை வெளியிடுவதைக் கேட்டுக் கேட்டுப் புலவரானவர் பலர். பழம் புலவர் பலரும் ஞானியார் ஒருவரிடம் விளங்குதல் வியப்பன்றோ?. . சுவாமிகளின் பேச்சுத் திறனை எதற்கு ஒப்பிடுவது? கடல் மடைத் திறப்புக்கா? - வெண்கலக் கோட்டையில் அரசுவா புகுதலுக்கா? - பெரும் புயலுக்கா? - ஒயா மழைக்கா? எதற்கு - எதற்கு ஒப்பிடுவது? பலர் பலவாறு கூறுப. திருப்பாதிரிப் புலியூரில் வீற்றிருந்து அடியவர்க்கு அருள்புரியும் கோவலடிகள் கருமை பூத்த ஒரு பொறுமை மலை. அம்மலையின் உச்சியில் - மூளையில் - கலைமேகங் கள் பொழிந்த அருவி மழைநீர், தேங்கித் தேங்கிப் புரண்டு திரண்டு பன்முகங்கொண்டெழுந்து முட்டி முடுகி, வாயின் வழியே முழங்கி விரைந்து இடையீடில்லாச் சொற் றொடர் அருவியாக இழிந்து, பலதிறச் சுவை நுட்பப் பொருள்கள் மிதந்து சுழல, அன்புவெள்ளப் பெருக்காய்ப் பரவிப் பரந்து, அருள் அலை கொழித்துக் கொழித்து ஒடும். நீர் பருகப் போந்த புலி, கரடி, யானை, மான், பசு முதலியன அருவி முழக்கில் எழும் இன்னொலி கேட்டு,