பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 சொற்பெருக்கு கடல் மடை திறந்த தொத்து மிடுக்கொடு பரந்து சென்று கேட்போரின் செவி வழி நுழைந்து மனப் புலத்தைப் பண்படுத்தும். உடல் தளரினும் உரை தள் ராது, ஐந்து மணி நேரம் ஒரே இடத்து அமர்ந்து, இடை விடாது-கேட்போர் மனம்தளராது சொற்பெருக்காற்ற வல்லார் இனி யாருளர்? யான் கண்ட உண்மை - கடந்த வெகுதானிய ஆண்டு சித்திரைத் திங்கள் 29-ஆம்நாள் (11-5-1938) திருவாரூர் - தம்பிரான் தோழர் தமிழ்ச் சங்கத்தின் நான்காமாண்டு விழாவைச் சுவாமிகள் தலைமை தாங்கி நடத்தினார்கள். அவர்கள் முன்னிலையில் யான் பேசும் பேறு பெற்றேன். 'சந்தரர் தந்த மறு பெயர்கள்' என்பது பற்றிப் பேசி னேன். பல நாட்களாகச் சுந்தரர் தேவாரத்தில் எனத் கோர் ஐயம் இருந்து வந்தது. ஏற்ற சமயம் என எண்ணிச் சுவாமிகளிடத்தில் அவ்வையத்தைத் தெரிவித்துக் கொண் டேன். அது, அல்லியந் தாமரைத்தார் ஆரூரன்' என்று சுந்தரர் தன்னைச் சொல்லிக் கொள்வது எக்காரணம் பற்றி என்பதே. இவ்வையத்தை யான் தேவாரத்தைப் பயின்ற காலையில் நீக்கிக் கொள்ளவில்லை. பின்பு யான் கேட்ட புலவர் பலரும் விடையிறுத்திலர். சுவாமிகள் முடிவுரையில் யாதொரு வருத்தமும் இன்றித் தயக்கமும் இன்றித் தம் மன அறையிலிருந்து நூல்களைப் புரட்டிப் பார்த்துச் சட் டெனப் பின்வருமாறு கூறினார்கள்: 'சுந்தரர் தாமரை மலர் மாலையைத் தமக்கு, உரிய தாகக் கூறிக்கொண்டது, தாம் அந்தணர் என்ற மரபு -ம்மி. நால்வகை வருணத்தார்க்கும் ஒவ்வோர் அடை பாளப் பூ உண்டு. அந்தணர்க்குத் தாமரை உரியது. முல்லையந்தார். வணிகன் இவன்’ என்பது திருவிளை பாடல்.’