பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 நீத்தார்கள் என்று கேட்டதும் மனத்தில் சிறிது ஆட்டம் ஏற்பட்டது. ஏன்? நான் அவர்களைத் தேடி ஆராய்ந்து கொண்டேன். பல வருஷங்களுக்கு முன்னர் அவர்கள் நல்ல சொற்பொழிவாளர்கள் என்று கேள்விப்பட்டேன். சென்னையில் ஒரு கோயிலில் விநாயகர் என்பது பற்றிப் பேசினார்கள். போய்க் கேட்டேன். சுமார் மூன்று மணி நேரம் பேசியிருப்பார்கள். விஷயங்களைக் கோவை செய்து ஒன்றன்பின் ஒன்றாகத் தெளிவாகச் சொன்னார்கள். பின்னர் அவர்களின் சொற்பொழிவுகளுக்குச் செளகரியப் பட்டபோது போய்க் கொண்டிருந்தேன். அவர்களுடன் பேசியதில்லை. விபூதி வாங்கியதில்லை. இவ்வாறு சில வருஷங்கள் சென்றன ........... அவர்களைக் காண எனக்குச் சாவகாசம் இல்லை; சந்தர்ப்பமும் இல்லை . அவர்கள் மயிலாப்பூர் வந்து தங்கினார்கள் அவர் தேடிக் கண்ட பொருளாயிற்றே. இவர்போல் பிறர் ஒருவர் நமக்குக் கிடைப்பாரோ? இப்பொழுது பார்த்து வைத்தால், யானும் சுவாமிகளைப் பார்த்திருக்கின்றேன் என்று சொல்லிக் கொள்ளலாமே. நமக்குக் கொடுத்து வைத்த காலம் பழகுவோமே - என்று நினைத்துப்போய் நமஸ்காரம் செய்தேன்,இரண்டு நாளைக்கு ஒரு தரமேனும் போனேன். சில மணிநேரம் இருந்தேன்-பேசினேன். சமயம் கிடைத்தால் சிறுபணி செய்வேன்...அவர்கள் தலைமையில் பேசும் பாக்கியமும் கிடைத்தது. அவர்களுக்கு இவ்வளவு பெருமை ஏன்? அவர்கள் நன்கு படித்தவர்கள், ஆங்கிலம் தெரியும். வடமொழி நன்கு தெரியும். தமிழில் அவர்கள் படிப்பு மிகப் பரந்தது, ஆழ மானது. இத்துடன் உலகியல் அறிவும் உண்டு. கற்றார்க் கும் கல்லாதார்க்கும் பயன்படும்படிப் பேச வல்லவர்கள். இனிமையாகப் பேசுவார்கள். அவர்கள் அன்பு நிறைந்தவர்