பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 சுடரும் திருமுக மண்டலமும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அன்புரையும் சமய உணர்ச்சியை மக்கட்கு நல்கும் அருளுரையும் நமது நெஞ்சினின்றும் ஒரு பொழுதும் நீங்கமாட்டா. நம்மைச் சிவ கதிக்கு உய்விக்கும் தெய்வ ஒளியாகச் சுவாமிகள் எப்பொழுதும் நிலை நின்று ஒளிர் வார்கள். 7. பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தமிழ் தமிழ் என்று பெரு முழக்கம் கேட்கும் இந்த நாளில், தமிழ்க்கென உழைத்துத் தம்முயிரையும் தந்த ஞானியார் நினைவைத் தமிழுலகம் எவ்வாறு நிலை நிறுத்தப் போகிறது எனப் பிறர் பார்த்திருப்பது இயல்பே. அவர்களும் கண்டு வியக்கும் நிலையில் தமிழன் நடந்து கொள்ள வேண்டும். 8. சா. கணேசன், கம்பன் கழகம், காரைக்குடி தமிழுக்காகவும் சைவத்திற்காகவும் திக் விஜயம் செய்து ஜெய வீரகோஷம் முழங்கிய ஞான கேசரியான பூரீலபூரீ சுவாமிகளை எந்த ஒரு தமிழனும் சைவனும் மறக்க முடியாது. தமிழையும் சைவத்தையும் தமது இரு கண்ணெனப் போற்றி வந்த புலவர்மணி, அவர்கள் பேசத் தொடங்கி விட்டால் உயர்ந்த கருத்துகள் நல்ல அமைப் போடு வெகு கம்பீரமான பாஷையில் துள்ளி வந்து அலை அலையாய் மோதும். - 9. சி. பன்னிருகைப் பெருமாள் முதலியார், திருவனந்தபுரம் அடிகளார் கோட்டாற்றுக்கு வந்திருந்த பொழுது ஆங்கிலப் படிப்பினால் மனம் தடுமாறியிருந்த எனக்குத் தக்க காலத்தில் நல்லறிவு புகட்டித் திருத்தினார்கள். அதற்காக அடிகளுக்கு நான் என்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.