பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



5

மூன்றாம் பட்டம்:

 மூன்றாம் பட்டத்து ஞானியார், 'சிவ சண்முக சங்கண வசவ மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்' என்னும் பட்டப் பெயருடன் பதினாறு ஆண்டு காலமே அருளாட்சி புரிந்தார். கீலக ஆண்டு-புரட்டாசி-நான்காம் திங்கட்கிழமையன்று (கி.பி. 1848, அக்டோபர்) இவர் மறைந்தார்.

நான்காம் பட்டம்:

 நான்காம் பட்டத்து ஞானியார், 'சிவசண்முக பரசிவ மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்' என்னும் பட்டப் பெயருடன் நாற்பத்திரண்டாண்டு அருளாட்சி புரிந்து, விரோதி ஆண்டு-ஐப்பசி-26-ஞாயிறு அன்று (கி.பி. 1889 நவம்பர்) ஊனுடல் துறந்தார்.

ஐந்தாம் பட்டம் - பிறப்பு வளர்ப்பு:

 இந்நூலில் விதந்து எழுத எடுத்துக் கொள்ளப் பெற்றவர் ஐந்தாம் பட்டத்து ஞானியார் அடிகளாரேயாவார். இவர் குடந்தைக்கு 3 கி.மீ. தொலைவில் உள்ள திருநாகேச் சுரம் என்னும் பதியில் வீரசைவப் பெரியாராக விளங்கிய அண்ணாமலை என்பார்க்கும் பார்வல் என்னும் அம்மையா ருக்கும், திருமுக (ரீமுக) ஆண்டு - வைகாசி - நான்கு - வியாழக் கிழமை - மூலநாளின் (17-5-1873) இரவு 10-15 மணிக்குத் தவ மகனாய்த் தோன்றினார். குழந்தைக்குப் 'பழநி' என்னும் பெயர் குட்ட்ப் பெற்றது.
 முதல் பட்டத்து ஞானியார் மட்டும் திருக்கோவ லூரிலே நிலையாய்த் தங்கியிருந்தார். மற்ற ஊர் அருளகங்கட்குப் போய்ப் போய் வருவார். இரண்டு-மூன்று -நான்காம் பட்டத்து ஞானியார்கள் புலிசை என்னும் திருப் பாதிரிப் புலியூர் அருளகத்திலேயே நிலையாய் அமர்ந் திருந்து மற்ற ஊர் அருளகங்கட்குப் போய்ப் போய்