பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



22

னார். அது கார்த்திகை 'விளக்கு (தீப) விழா' நடக்கும் காலம். அடிகளார் அருணகிரி முதலியார் இல்லத்தில் வீற்றிருந்தார்.திருக்கோயிலின் அறங்காவலர்களாக இருந்த செட்டிப்பிள்ளைகளின் வேண்டுகோட்கு இணங்க, 'சிவ பக்தி', 'அருணையும் அடியார்களும்' என்னும் தலைப்பு களில் சொற்பெருக்கு நிகழ்த்தினார்.

 பின்னர் வேலூர் போந்து, சைவ சித்தாந்த மகா சமாசத்தின் எட்டாவது மாநாட்டுக்குத் தலைமை தாங்கிச் சைவம், சித்தாந்தம் என்னும் தலைப்புகளில் கடல் மடை திறந்தாலெனச் சொல்வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்தார். இந்த மாநாட்டில், வழக்கம் போல், ம.ரா. குமார சாமிப்பிள்ளை, திரு.வி.க., சச்சிதானந்தம் பிள்ளை முதலி யோரும் சொல்மழை பொழிந்தனர். இம்மாநாட்டில் அடிகளார் ஆற்றிய சிறப்புரையைப் பற்றி, சித்துார் நாட்டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சி.எம். பார்த்தசாரதி என்பார் 'இந்து’ (The Hindu) நாளிதழுக்கு ஆங்கிலத்தில் சிறப்புக் கட்டுரை ஒன்று எழுதி அனுப்பினார். அப்படியே அது வருமாறு:

Extract from ‘The Hindu’ ‘Jan. 13, 1914, The Eighth Siva Siddhanta Conference. (From a Correspondent)

 “The eighth anniversary of the ‘Saiva Siddhanta Maha Samajam’ at Vellure on the 26th, 27th and 28th December 1913. During the entire session, the enthusiasm that prevailed judged both by the numbers that attend and the interest displayed by the audience, was remarkable great. Indeed those who had attended the earlier anniversaries declared that the Vellore Conference was the most sucessful of any in the