பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

கண்டாச்சி புரம்

 முன்னர் ஒரு முறை ஆரவாரமாக அடிகளாரை வரவேற்ற கண்டாச்சி புரத்தினர், 1941- மார்ச்சில் அவ்வூர்ச் செந்தமிழ்க் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழாவிற்குத் தலைமை ஏற்க அன்புடன் அழைத்தனர். அடிகளார் இணங்கித் தலைமை ஏற்று அருளுரை வழங்கினார்.

வடலூர்

 வடலூர் இராமலிங்க வள்ளலாரிடமும் அடிகளாருக்கு ஈடுபாடு உண்டு. வள்ளலாரைப் பற்றித் திரு.வி.க. முதலானோருடன் அடிக்கடி கருத்து கூறுவார். வடலூரில் 'சன்மார்க்கம்’ என்னும் தலைப்பில் அடிகளார் சிறந்த சொற்பெருக்கு ஆற்றி வள்ளலார்க்கு மேலும் பெருமை சேர்த்தார்.

5. பாடமும் பொழிவும்

 அடிகளாரின் பாடம் கற்பிக்கும் முறையும் சொற் பொழிவாற்றும் திறனும் தனிப் பெருமை வாய்ந்தன.

கற்பிக்கும் முறை

 பாடம் கற்பிக்கும் ஆசிரியருக்கு இருக்கவேண்டிய இலக்கணம் - இயல்பு பற்றி நன்னூலில் சொல்லியிருப் பதற்கு இலக்கியமாய் அடிகளார் அமைந்திருந்ததோடு மட்டுமன்றி, புதிய கற்பிக்கும் முறைக்குப் பொருத்தமானவராயும் அமைந்திருந்தார்.
 சிலர், அன்றும் சரி - இன்றும் சரி - ஒரு பாட்டைக் கற்பிக்க வேண்டு மெனில், பாட்டை முதலில் சொல்