பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv பேரும், புகழும் பெற்ற பெருமித வாழ்வு நடத்தி வந்தார்கள். சமயப் பொறை மிக்க சான்றோர். "பாடம் சொல்லல் பாடம் கேட்டல்” என்னும் நல்ல மரபு தமிழகத்தில் உண்டு. இன்னார் இன்ன பாடம் சொன்னார்கள். இன்னாரிடம் இன்ன பாடம் கேட்டேன் என்று சொல்லிப் பெருமையுறுவர். வல்லார் வாய்க்கேட்டுணர்க என்ற வழக்கும் பெருவழக்காய் உள்ளது. அதுவும் சமய நூல்களைப் பாடஞ் சொல்லு வது அரியகலை. அதுவும் ஞான நூல்களை நயம்படச் சொல்லும் வித்தகர் தவத்திரு ஞானியார் அடிகள். அவர் களிடம் பாடம் கேட்டவர்கள் பெரும்பேறு பெற்றவர்கள்.

 பாடம் சொல்லுதலில் தனித்திறம் சான்றவர்கள் பேரறிவுத் திறத்தால் எதனையும் எளிதில் விளக்கி விடுவார்கள். அவர்களிடம் பாடங்கேட்டவர்கள் இன்று நல்லாசிரியர்களாய், நாடு புகழும் நாவலர்களாய், பேரும் புகழும் பெற்ற பெருமக்களாய் விளங்குவதே அவர்கள் தம் பேராற்றலுக்குச் சான்றாகும். நாடெல்லாம் சென்று, ஊரெல்லாம் இருந்து சைவம் பரப்பிய சைவ எழுகதிர் ஞானியார் அடிகள் அவர்கள் வழியில் அவர்கள் நன்மாணாக்கர்கள் தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் நாளும் தமிழ் பரப்பி வருகின்றனர். 
 நடேச முதலியார் 
 இராசாக் கண்ணனார் 
 சுந்தர சண்முகனார் 
 ஆறுமுக முதலியார்
 வை. இரத்தின சபாபதி 

என மாணவர் அணி வாழையடி வாழை என வளர்கிறது. அறிவுக் கடலாய், தமிழ் ஊற்றாய், சொற்பொழிவுக் கொண்டலாய் விளங்கிய ஞானியார் அடிகளின் பிறந்தநாள்