பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

எனத் தமிழ் மாமறை கூறும். அத்தகைய அந்தணர் தொகை உலகெங்கும் பரவுதல் வேண்டும். அவரது உள்ளத்தினின்றும் பெருகும் குளிர்ச்சியே தற்போது ஏற் பட்டுள்ள கொதிப்பை ஆற்றி மன்பதையை உய்விக்கும். இத்தகைய தக்காரின் மிக்காராய்த் தலைசிறந்து விளங்கி யவர் நம் ஞானியார் அடிகள் அன்றோ!

'எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர் வாய்
நுண்பொருள் காண்பது அறிவு” , (திருக்குற்ள் , 424)

என அறிவுக்கு விளக்கவுரை கூறினார் ஆசிரியர் திருவள்ளு வனார். ... ஒருவன் உள்ளத்தெழும் சொற்களும் அவன் அவற்றைச் சொல்லும் முறைமையுமே அவனு டைய கல்வி, கேள்வி ஆகியவற்றை அறிவதற்கு உரைகல் என்பதை யாவரும் அறிவர். ஆரியமும் செந்தமிழும் ஐயம் திரிபற முழுதுணர்ந்து வேதம், ஆகமம், சாத்திரம் இலக்கியம் இலக்கணம் முதலிய விழுமிய நூற்பொருள்கள்ை அறிவு நுணுகி ஆழ்ந்து ஆராய்ந்து அறிந்து, அங்ங்னம் ஆராய்ந்தனவற்றைப் பிறர் உவக்கும் வகையால் நுண் பொருளும் எளிதில் விளங்கும் வண்ணம், பொலிவு தோன்ற முகமலர்ந்து இனியவாகச் சொல்லி, சைவ சமய உண்மைகளையும் திருநெறித் தமிழின் மாண்புகளையும் தமிழ் நாடெங்கணும் பரவச் செய்து, மக்கள் உள்ளங் களைக் கவர்ந்து கொண்ட பெருமை நம் ஞானியாரடி களுக்கே உரிய தொன்றன்றோ! மெய்யாசிரியருக்கு நூல் கள் வகுத்த பண்புகள் எல்லாம் அவரிடம் மிளிர்ந்திருப் பதை, அவரது சொற்பொழிவை ஒருசில நிமிஷங்கள் கேட்டவனும் கண்டிடுவான் என்பதில் ஐய முண்டோ?

... "இக்காலத்து ஆசிரியன்மார்க்கு, எவ்வாற்றானும் மெய்யாசிரியராகத் திகழும் நம் தேசிக மூர்த்திகளின் வாழ்க்கை உலகிற்கு நன்னெறி உணர்த்துவதாகுக.”