பக்கம்:ஞான மாலை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ஞான மாலை இருப்பதும், பெரிய விசித்திரங்கள் அல்லவா? அகண்ட வெளியில் (Space) பூமி முதலிய உருண்டை கள் எல்லாம் எப்போதும் இயங்கிக் கொண்டிருக் கின்றனவே; இவற்றையெல்லாம் தாங்கி நிற்பவன் யார்? காலத்தையும், இடத்தையும் படைத்தவன் யார்? சூரியன் முதலிய கோள்களையும் அந்த அந்தக் காலத்தில் அந்த அந்த முறையில் இயங்கும்படி செய் கின்றவன் யார்? சாட்டை இல்லாத பம்பரம் போல அண்ட கோடிகள் அத்தனையும் தம் தம் கதியில் இயங்கும்படி இயக்கும் பெருமான் யார்? இத்தகைய செய்திகளைச் சற்றே எண்ணிப் பார்த்தால் ஏதோ ஒரு சக்திக்கு நாம் உட்பட்டிருப் பதும், அந்தச் சக்தியாகிய ஆண்டவன் இந்த அற்புதமான திருவிளையாடல்களைச் செய்கின்ருன் என்பதும் புலகுைம். அந்த எண்ணத்திலிருந்து உருக்கம் பிறக்கும். சிறப்பான கருணை இவை யாவும் பொது வகையில் உயிர்க்கடிட்டங் களுக்கு இறைவன் ஆற்றும் செயல்கள்; பொதுவகை யான அற்புதங்கள். எனக்கென்று ஆண்டவன் தனி யாக என்ன செய்திருக்கிருன்?' என்ற கேள்வி பிறக் கும். நமக்கும் கருவி கரணங்களே இறைவன் கொடுத் திருக்கிருன் அல்லவா? அது கிடக்கட்டும். பக்கத்து வீட்டில் ஒருவன் ஊமையாகப் பிறந்திருக்க நாம் வாயி ல்ை பேசிச் சண்டப்பிரசண்டம் செய்கிருேமே! அவனைப் பெற்றவளும் பத்து மாதம் கருவுற்றிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/100&oldid=855695" இலிருந்து மீள்விக்கப்பட்டது