பக்கம்:ஞான மாலை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சக் கன கல் 83 தான் பெற்ருள். நாமும் அப்படித்தான் பிறந்தோம். நாமும் ஊமையாகப் பிறந்திருக்கலாம். அவ்வாறு பிறக்கச் செய்யாமல் நம்மை வாய் உடையவனுகப் பிறக்கும்படி செய்தானே, அது நம் அளவில் செய்த கருனே அல்லவா? அதை கினேங்து எப்போதாவது உருகி இருக்கிருேமா? ஊரெல்லாம் பலவகை வியாதி கள் வரும்போது சில சமயங்களில் நாம் தப்பிவிடு கிருேமே! அதற்கு காம் என்ன முயற்சி செய்தோம்? இறைவன் கருணை நம்மைத் தனியே இருந்து பாது காத்ததே என்று உருகி இருக்கிருேமா? சாலையில் நடமாடும் யாரோ ஒருவன் தடுக்கி விழுகிருன். அதைப் பார்த்துச் சிரிக்கத் தெரிகிறதே யொழிய, அதே சாலையில் நடமாடுகிற காம் தடுக்கி விழுக்திருக் கலாமே! அவ்வாறு விழாமல் காப்பாற்றின்ை இறை வன் என்பதை எண்ணி உருகியிருக்கிருேமா? கரணங்கள் எல்லாம் நமக்குச் செவ்வையாகப் படைத் துக் கல்வி தந்து ஓரளவு வாழ்வதற்கும் வசதி செய்து வைத்திருக்கிருனே; இது நம் அளவில் அவன் வைத்த கருணை தானே? - இப்படி அவன் செய்ததை கன்றி யறிவுடன் கினைத்து உருகிளுல் இனியும் அவன் கலங்களைத் தரு வான். முன்பு கொடுத்த பணத்திற்கே ரசீது தராத போது மேலும் பணம் தரவேண்டுமென்று கினைத்து நாம் அழலாமா? இறைவன் நிகழ்த்தும் செயல்களே யும், நம்மிடம் காட்டும் கருணையையும் கினைந்து உருகுவதற்கு இந்தப் பிரபஞ்ச வாழ்வேபோதுமானது. சமய சாத்திரங்களைப் படிக்க வேண்டாம்; வேதாந்த சாத்திரங்களை கெட்டுருப் போடவேண்டாம். கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/101&oldid=855696" இலிருந்து மீள்விக்கப்பட்டது