பக்கம்:ஞான மாலை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சக் கன கல் &5 அதில் உள்ள பண்டங்களை எல்லாம் தனித்தனியே எடுத்துக் கையில் கொடுக்க மாட்டார். 'இந்தா அப்பா, அந்தப் பெட்டியின் சாவி, இதை வைத்துக் கொள். இதைக் கொண்டு பெட்டியைத் திறந்து வேண்டியவற்றைப் பயன் படுத்திக்கொள்’ என்று சொல்வார். - அதுபோல அருணகிரியார் மோட்சமாகிய இன்பத்தைத் தருகிறேன் என்று சொல்லவில்லை. பக்தர் ஆவதற்குரிய சாவி இது இந்தச் சாவியை வைத்துக்கொண்டு கிரதிசய இன்ப வாழ்வாகிய நிலையைப் பெறலாம்" என்று சொல்கிருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/103&oldid=855698" இலிருந்து மீள்விக்கப்பட்டது