பக்கம்:ஞான மாலை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஞ்சொற் புனை ഥൻ கந்தர் அநுபூதி பாடுவதன் பயன் அன்பர்கள் அதைப் படித்து நெஞ்சம் உருகவேண்டும் என்பதே என்று காப்பாகிய முதல் பாட்டின் தொடக்கத்தில் அருணகிரியார் குறிப்பித்தார். பிறகு, கங்தர் அநுபூதியைப் பற்றிய செய்திகளைச் சொல்ல வருகிரு.ர். இந்தச் செஞ்சொற் பாமாலைக்குரிய தலைவனுகிய முருகனைப் பற்றிப் பேசுகிருர். இந்த மாலையை ஆறுமுக நாதனுக்குக் சூட்டப் போகிருர். அதற்குக் கணபதியின் திருவருள் வேண்டுமென்று. சொல்ல வருகிருர். முருகனேச் சொல்லும்போது, தஞ்சத்து அருள் சண்முகனுக்கு - என்கிருர். தஞ்சம் என்று அடையும்போது அவர் களுக்கு அருள் செய்கின்ற ஆறுமுககாதனுக்கு" என்பது பொருள். இறைவன் எல்லோருக்கும் அருள் செய்கின்ருன். அவன் அருளே திருவுருவமாக இருக்கிறவன். உயிர்க் கூ ட் ட ங் க ளு க் கு அருள் செய்வ தையே தன்னுடைய கடமையாகக் கொண்டவன் அவன். எல்லோருக்கும் பொதுவான வகையில் அருள் செய்வது ஒன்று; சிறப்பான ഖങ്ങകിൽ அருள் செய்வது மற்ருென்று. எல்லோருக்கும் மழை பெய் தாலும் அதனைத் தேக்கி வைத்திருக்கிறவர்களுக்கு மழை நின்ற பின்பும் நீர் பயன்படும். அதுபோலவே கருவி கரணங்களையும் பிரபஞ்சத்தையும் வாழ் நாளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/104&oldid=855699" இலிருந்து மீள்விக்கப்பட்டது