பக்கம்:ஞான மாலை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 - ஞான மாலே ரும் மீட்டும் மீட்டும் பிறக்கிருர்கள். அவர்களுக்கு இறைவனுடைய சிறந்த அருள் கிடைக்காது. எல்லோரையும்போல வாழ்ந்தாலும், இறந்தாலும் மீட்டும் பிறந்தும் இறந்தும் வாழ்க்கைச் சுழலில் ஈடு படுவார்களேயன்றி, இந்தச் சுழலினின்றும் அகன்று இறைவனுடைய இன்பப் பொய்கையில் குளிப்பதற் குரிய வகை அவர்களுக்குக்கிடைக்காது.அவனுடைய சிறப்பான திருவருள் கிடைத்தால்தான் முத்தி கிலே கிடைக்கும். அதற்கு அவனைத் தஞ்சம் என்று அடையவேண்டும். . அருளில் மிக்க மூர்த்தி இறைவன் பல வடிவங்களில் இருந்து அருள் செய்தாலும் மிக எளிதில் அருள் செய்கின்ற திரு வுருவம் முருகத் திருவுருவம். இறைவனுக்கு அருள் என்பது குணம். அவன் எப்போதும் அருள் செய்து கொண்டிருக்கிருன். அந்த அருளோட்டம் மிகுதி யாக வேண்டுமென்று கருதி முருகத் திருக்கோலம் கொண்டான். ஐ ங் து திரு'முகம் படைத்த சிவ பெருமான் அந்த முகங்களால் ஆகமங்களை வெளி யிட்டான். அப்போது அவனுக்குப் பத்துத் திருக் கரங்கள் இருந்தன. . . "திகழ் தசக்கரச் செம்முகம் ஐந்துளான்' என்பது கந்த புராணம். ஐந்து முகமுடைய சிவபெரு மான் அருள் மிகுதியாகவேண்டுமென்று கருதி ஆறு முகமும் பன்னிரண்டு கரங்களும் உடையவளுளுன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/106&oldid=855701" இலிருந்து மீள்விக்கப்பட்டது