பக்கம்:ஞான மாலை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ஞான மாலை மிகுதியைக் காட்டுவதற்குச் சிறந்த அடையாளம். ஆகையால், தஞ்சத்து அருள் சண்முகனுக்கு என்று சொன்னர். ஆறுமுகம ஆறுமுகன் ஆறு திக்குகளிலும் முகம் கொண் டவன். நான்கு திசைகள், மேல், கீழ் ஆக ஆறு திக்குகள். எந்தத் திசையிலிருந்து எந்த அன்பன் வந்து தஞ்சம் என்று புகுந்தாலும் இருந்தபடியே அவனுக்கு அருள் செய்கின்ற பேராற்றல் உடை. யவன் முருகன். எல்லா இடங்களிலும் அவன் முகத் தின் பார்வை படுகிறது. எல்லாத் திசைகளிலும் அவனுடைய கண்ணின் அருள் பார்வை படுவதா லும், எந்த ஆன்மா எந்தத் திசையில் இருந்து வந்து தஞ்சம் புகுந்தாலும் அதற்கு உடனேயே அருள் கிடைக்கும். ஆகையால் புகல் அடைவாருக்கு அருள் செய்வதில் சிறந்தவன் ஆறுமுகன் என்ற கருத்தைக் கொண்டே, - - தஞ்சத்து அருள் சண்முகனுக்கு என்று சொன்னர். - மாலையின் இலக்கணம் சண்முகநாதனுக்கு ஞான மாலை சாத்தப் போகிருர் அருணமுனிவர். அந்த மாலையின் இலக் கணத்தைச் சொல்கிருர். - இயல்சேர், செஞ்சொல் புனை மாலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/108&oldid=855703" இலிருந்து மீள்விக்கப்பட்டது