பக்கம்:ஞான மாலை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஞ்சொற் புனே மாலே ցք வரிசையாகப் பூக்களைத் தொடுத்து அமைப்பது மாலை என்று பெயர் பெறும். இங்கே பாக்களைத் தொடுத்து அதற்கு மாலை என்று பெயர்கொடுக்கிருர். கந்தர் அநுபூதி என்பதே அதன் பெயரானுலும் அது வும் பாமாலைதானே? முன்பே அவர் ஞானமாலே கட்ட வேண்டுமென்று ஆசைப்பட்டாரென்பதை நாம் பார்த் தோம். இப்போது அந்த மாலையின் இலக்கணத்தை வேறு வகையில் சொல்கிருர். அங்கே, கட்டும்போது அமையும் கிலேயைச் சொனஞர். இங்கே மாலையாகப் பார்க்கும்போது அமையும் கிலையைச் சொல்கிருர். ‘மாலையில் தமிழின் பகுதிகள் எல்லாம் சிறப் பாக அமைந்திருக்கவேண்டும்” என்பது அருணகிரி யார் ஆசை. தமிழ் ஐந்து இலக்கணங்களால் சிறப்பு அடைவது. இலக்கணம் என்பது லட்சணம் என்பதன் திரிபு. அதற்கு அழகு என்பது பொருள். தமிழ் ஐந்து வகையான பகுதிகளால் அழகுற்றது; ஐவகை இலக் கணங்கள் கொண்டது. பழங் காலத்தில் மூன்று இலக்கணங்கள் என்று சொன்னர்கள். நாளடைவில் விரிந்து ஐந்து இலக்கணங்கள் ஆகிவிட்டன. அருண கிரிநாதப்பெருமான் காலத்தில் தமிழ் ஐந்து இலக். கணங்களுடையது என்ற மரபு வந்துவிட்டது. ஐந்து இலக்கணங்களும் பொருந்திய பாமாலையை முருகப் பெருமானுடைய திருத்தாளில் அணிய வேண்டும் என்று கினைக்கிருர் அருணே முனிவர். ஐந்து இலக்கணம் அந்த மாலை, புனை மாலையாக இருக்கவேண்டும். சொல் மாலையாக இருக்கவேண்டும்; செஞ்சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/109&oldid=855704" இலிருந்து மீள்விக்கப்பட்டது