பக்கம்:ஞான மாலை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஞ்சொற் புனே மாலை 93 எதுவும் இல்லாது கிரம்பப்பெற்ற, பாமாலை என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்துகிரு.ர். முருகனும் தமிழும் முருகப் பெருமான் தமிழைத் தந்தவன். செந். தமிழ் நூல் விரித்தோனே” என்று கந்தர் அலங்காரத். தில் சொல்வார். தமிழினிடத்தில் அவனுக்கு அதிகக் காதல் உண்டு. அவனுடைய பாடல்களை எழுத்துப் பிழை இல்லாமல் பாடவேண்டும் என்று அலங்காரத் தில் சொல்வார்: - 'அழித்துப் பிறக்க ஒட்டா அயில் வேலன் கவியை அன்பால் எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீர் , முருகப் பெருமான் தமிழ் மரபைக் காப்பவன். அகப் பொருள் இலக்கணத்தின் முதல் திணையாகிய குறிஞ் சிக்குத் தலைவன். களவு, கற்பு என்னும் இருவகை மணத்தில் சிறந்ததாகப் போற்றப்பெறும் களவு மனப்படி வள்ளியெம் பெருமாட்டியை மணந்தவன். முதல் சங்கத்தில் ஒரு புலவகை இருந்து விளங்கிய வன். - சங்கத் தமிழின் தலைமைப் புதல்வா" என்று குமரகுருபரர் பாராட்டுகிருர். அகத்தியனருக்கு உபதேசம் செய்தவன். நக்கீரர் உரையே மிகச் சிறந்தது என்று உருத்திர சன்மனுக இருந்து புலப் படுத்தினவன். - இப்படித் தமிழுக்கும், முருகனுக்கும் உள்ள தொடர்பு பல காலமாகப் பல வகையாக இருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/111&oldid=855707" இலிருந்து மீள்விக்கப்பட்டது