பக்கம்:ஞான மாலை.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ஞான மாலே ‘அத்தகைய சிறந்த பக்குவத்தில் நான் இருந்து பாமாலை சூட்டவேண்டும் என்று தம்முடைய விருப் பத்தை அருணகிரியார் விண்ணப்பித்துக்கொள்கிருர். செஞ்சொற் புனைமாலை சிறந்து இடவே. பஞ்சக்கர ஆனை இப்படியெல்லாம் பேசிய அருணகிரியார் இந்தக் காப்புக்குரிய தெய்வமாகிய விநாயகரை கினைக்கிருர். பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம். 'ஐந்து கரங்களை உடைய யானைமுகப் பெருமாளுகிய விநாயகருடைய பாதத்தைப் பணிந்து வணங்கு வோம்’ என்பது இதற்குப் பொருள். பணிவாம் என்று பன்மையில் சொன்னுர். அது தம்மை உயர்வாகக் கருதிச் சொன்னது அன்று. இந்தப் பாமாலை பாடுவதற்குக் காரணம், தாம் பெற்ற இன்ப அநுபவத்தைப் பிறரும் பெறவேண்டும் என்பது தான். ஆகவே இதல்ை பயன் அடைபவர்கள் உலகத்து மக்கள். எல்லோரும் சேர்ந்து பயன் பெறும் ஒன்றை விநாயகப் பெருமான் திருவருளிளுல் நன்கு நிறைவேற்றவேண்டும் என்று எண்ணினர் அருணகிரியார். ஆகையால் பயன் பெறுவதற்குரிய மற்ற மக்களையும் அழைத்து, எல்லோரும் சேர்ந்து விநாயகப்பெருமான் பாதத்தை வணங்குவோம் என்று சொல்கிருர். . . . பாதம் பணிதல் என்பது பணிவைக் காட்டுவது. இதைப்பற்றி வேறு இடங்களிலும் பேசுவதற்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/114&oldid=855710" இலிருந்து மீள்விக்கப்பட்டது