பக்கம்:ஞான மாலை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ஞான மாலே அருள்வாயாக என்று சொல்வதில் அழகான பொருத் தம் இருக்கிறது. கைக்கு ஓர் இலக்கணமாக எளிதில் தரலாமே என்று குறிப்பிடுவதுபோல அமைக்கிருர். யானை உருவம் ஐந்து கரங்களையுடைய யான் என்று விநாயகரைச் சொல்கிருர். ய ா னே முகம் உடைய விநாயகரை யானே என்று சொல்வது வழக் கந்தான். ஆல்ை இங்கே யானை முகன் என்றும் சொல்லி இருக்கலாமே. யானை என்று சொல்வதில் ஏதேனும் சிறப்பு இருந்தால் அதனைக் கொள்வதில் தவறு இல்லை. எனக்கு ஒரு சிறப்புத் தோன்றுகிறது. முருகப்பெருமானுக்கு மாலை சூட்ட ஆசைப்பட் டார் அருணகிரியார். அப்பெருமானுக்கு உலகத்தில் முன்பு மாலை சூட்டிய பெருமாட்டி வள்ளிநாயகி. வள்ளிகாயகியின் திருமணத்தைப் பற்றிச் சற்றே நினைந்து பாருங்கள். முருகப்பெருமானை எளிதில் அவள் மணந்து கொள்ளவில்லை. விநாயகப்பெருமான் அங்கே வந்து உதவி செய்தார். முருகன் வள்ளியெம் பெருமாட்டியின் மாலையை அணிவதற்கு முன்னுல் விநாயகர் எழுந்தருளித் துணை செய்தார். ஆகவே முருகப்பெருமானுக்கு மாலே இடுவதற்கு முன்பு உப காரம் செய்யும் பழக்கம் முன்பே விநாயகருக்கு இருக் கிறது. வள்ளிநாயகி மாலையை முருகனுக்கு அணி வதற்கு முன்னலே ஆனைமுகனுக விநாயகர் தோன்ற வில்லை; ஆனயாகவே தோன்றினர். இப்போதும் முருகப்பெருமானுக்கு மாலை சூட்டப் புகுந்த அருண கிரியார் அந்தப் பழைய திருவிளையாட்டை நினைக் கிருர். முருகனுக்கு மாலை சூட்டுவதற்கு முன்னுலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/116&oldid=855712" இலிருந்து மீள்விக்கப்பட்டது