பக்கம்:ஞான மாலை.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஞ்சொற் புனே மாலை $99 யானையாகவே வந்த பெருமான் ஆயிற்றே. அப்படியே வந்து எனக்கு அருள் செய்யவேண்டும் என்று முன்னை நிகழ்ச்சியைப் பொருத்தமாகச் சொல்வா ரைப் போல, ஆன பதம் பணிவாம் என்று சொன்னுர். - பாதம் பணிதல் ஐந்து கரத்தையுடைய யானே யானுலும் அந்தக் கரத்தினுல் அவன் கமக்கு வேண்டியவற்றைத் தருவ தாக இருந்தாலும் நாம் பணியவேண்டியது அவ னுடைய பாதத்தைத்தான். அவன் திருக்கண் பார்வை யால் அருள் கொழிப்பது, திருவாக்கினுல் உப தேசம் பண்ணுவது, திருக்கரத்தால் அருள் செய்வது, இன்னும் இதுபோன்ற உதவிகளைப் பண்ணுவது ஆகிய எல்லாவற்றிற்குமே திருவடியைத் தொழுதால் போதும். திருக்கரத்தால் அருள் தருவதற்குக் கரத்தைத் தொழவேண்டும் என்பது இல்லை. வேரில் தண்ணிர் ஊற்றில்ை இலே தழைத்து, கிளைகள் வளர்ந்து, பூக்கள் மலர்ந்து, காய்கள் காய்த்துக் கனி கனியும். அதுபோலவே பஞ்சக்கர ஆனையின் பாதத்தைப் பணிந்தால் அப்பெருமான் கரத்தினுல் தருவதைத் தருவான். கண்ணுல் அருள் செய்வதை அருளுவான். தருகின்ற கைகளே முதலில் பார்த்துப் பின்பு வழங்கும்பொருட்டுப் பாதத்தைப் பற்றிக்கொள் கிருர். ஆகவே, - -- - - பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம் என்ருர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/117&oldid=855713" இலிருந்து மீள்விக்கப்பட்டது