பக்கம்:ஞான மாலை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 ஞான மாலை தொகுப்பு இதுவரைக்கும் கூறினவற்றைத் தொகுத்துப் பார்க்கலாம். கந்தர் அநுபூதியின் தொடக்கத்தில் அருணகிரியார் காப்புச் செய்யுளைச் சொன்னர். சைவர்கள் விநாயகப்பெருமானுக்குக் காப்புச் சொல் வதும் வைணவர்கள் கம்மாழ்வாருக்குக் காப்புச் செல்வதும் வழக்கம். அருணகிரியார் விநாயகப் பெரு மானுக்குக் காப்புச் சொல்லும்போது கந்தர் அநுபூதி யின் பயனை முன்னுல் சொல்லி, முருகப்பெருமா னுடைய இயல்பைப் பின்பு சொல்லி, இந்தப் பாமாலை யின் இலக்கணத்தை அப்பால் சொல்லி, இதனே எந்த நிலையில் இருந்து சூட்டவேண்டும் என்பதைப் பிறகு சொல்லி, விநாயகரைப் பற்றிய வணக்கத்தைக் கடைசியில் சொல்லி முடிக்கிரு.ர். கெஞ்சக் கன கல்லும் நெகிழ்ந்து உருக என்பது பயன். - தஞ்சத்து அருள் சண்முகனுக்கு என்பது பாட்டுடைத் தலைவனது இலக்கணம். இயல்சேர் செஞ்சொல் பு:னமாலை என்பது நூலின் இலக்கணம். . சிறந்து இடவே என்பது நூலைப் பாடும் முறையின் இலக்கணம். . பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம் என்பது காப்பாக கிற்கும் மூர்த்தியை வழிபடும் முறை. இவ்வளவையும் இந்தக் காப்புச் செய்யுளில் பார்த்தோம். . 洪 * - +

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/118&oldid=855714" இலிருந்து மீள்விக்கப்பட்டது