பக்கம்:ஞான மாலை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஞ்சொற் புனே மாலே - 101 நெஞ்சக் கனகல் லும்நெகிழ்ந்து உருகத் தஞ்சத்து அருள்சண் முகனுக்கு இயல்சேர் செஞ்சொல் பு:னமா லைசிறந் திட்வே பஞ்சக் கரஆ ?னபதம் பணிவாம். - நெஞ்சமாகிய கனமுள்ள கல்லும் முதலில் நெகிழ்ச்சி பெற்றுப் பின்பு உருகும்பொருட்டு, தஞ்ச மென்று அன்பர்கள் புக்கவிடத்தில் அவர்களுக்கு அருள் புரியும் ஆறுமுகநாதனுக்கு, இயற்றமிழின் இலக்கணம் அமைந்த பொருளால் செம்மையை யுடைய சொற்களே அழகாகப் புனைந்து அமைத்த பாமாலையை கருவிகரணங்கள் தூயனவாக இருக்கும் சிறந்த கிலேயில் கின்று அணிய, ஐந்து கரங்களை யுடைய யானையாகிய விநாயகப் பெருமானுடைய திருவடிகளை வணங்குவோம். - நெஞ்சமாகிய கல். அது கனமுள்ள கல். கனம் என்பது வடசொல்லாதலின் கனகல் என இயல்பாக கின்றது. கல்லும் என்பது உயர்வு சிறப்பும்மை. பிற கற்கள் உருகினலும் நெஞ்சம் உருகாதது என்ப தைப் புலப்படுத்தியது. நெகிழ்ந்து உருக இட என்று கூட்டவேண்டும். இந்த மாலையைப் புனைந்து இடுவ தற்கு நெகிழ்ந்து உருகுதல் பயன். உருக என்பது காரியப் பொருளில் வந்த எச்சம். தஞ்சத்து தஞ்ச மென்று புக்கபோது, தஞ்சம் அடைதல் என்ற பொருளில் வந்த தொழிற்பெயர் அத்துச்சாரியைப் பெற்றது; ஏழாம் வேற்றுமைத் தொகை; தஞ்சம் அடைதலின்கண் என்று சொற்பொருள் விரிக்க வேண்டும். ஷண்முக என்பது சண்முகன் எனத் தமிழில் வந்தது. சண்முகனுக்கு இட என்று முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/119&oldid=855715" இலிருந்து மீள்விக்கப்பட்டது