பக்கம்:ஞான மாலை.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ஞான மாலே இயல்சேர் மாலை, செஞ்சொல் மாலை, புனே மாலே என்று கூட்டுக. இயல் - முத்தமிழில் ஒன்ருகிய இயற்றமிழ்; இங்கே அதன் இலக்கணத்தைக் குறித்து கின்றது. செஞ்சொல் - செம்மையாகிய சொல்; செம்மை, இங்கே நிறத்தைக் குறிக்காமல் கிறைவு முதலிய பண்புகளைக் குறித்தது. சொல்லால் புனைந்த மாலே என்றும் சொல்லலாம். புனை - அழகு செய்த. மாலை - பாமாலை. பல பிரபந்தங்கள் மாலை என்னும் பெயருடன் வழங்குவதைப் பார்க்கலாம். இரட்டை மணி மாலே, மும்மணி மாலே என்று அடையடுத்தும் சோணசைல மாலை என்பதுபோல அடையின்றியும் மாலைகள் இருக்கின்றன. சிறந்து-காம்சிறந்தகிலேயில் இருந்து இடஅணிய. மாலையிடுதல் என்பது வழக்கு. ஏகாரம்: அசைகிலே. பஞ்சக்கரம் என்பது வடசொல் தொடராயினும் தமிழ்முடிபு ஏற்றுக் ககரம் மிக்கது. பஞ்சக்கரங்களையுடைய ஆனே என்றதல்ை விநாயகர் என்ற பொருள் கிடைத்தது. ஆனையினது பதம்; பதத்தைப் பணிவாம். பணிவாமென்பது முன் னிலையையும் அடக்கிய உளப்பாட்டுத் தன்மைப் L_{# 6{}) Uí), . . நெகிழ்ந்து உருக இடப் பணிவாம் என்று கூட்ட வேண்டும். இட என்பதும் காரியப் பொருளில் வந்த GT 3F 3F LÊ, . . - பணிந்தால் இடலாம்:இட்டால் உருகலாம் என்று காரணகாரியங்கள் தொடர்ந்துஅமைவதைக்காண்க. ஐம்பத்தொரு பாடல்கள் அமைந்த இந்த ஞான மாலைக்கு அழகான காப்புச் செய்யுளை அமைத்த அரு ணகிரியார் அடுத்து நூலைப் பாடத் தொடங்குகிருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/120&oldid=855717" இலிருந்து மீள்விக்கப்பட்டது