பக்கம்:ஞான மாலை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடும் பணி கந்தர் அநுபூதி என்பது ஒரு சொற்கோயில், கல்லால் அமைத்த கோயில்களில் உள்ள சில அமைப்புகளைப் போல இந்தக் கோயிலிலும் சில அமைப்புகள் உண்டு. முருகப்பெருமான் எழுந்தருளி இருக்கும் கற்கோயிலின் வாசலில் துவார கணபதி எழுந்தருளி இருப்பார். கந்தர் அநுபூதியாகிய சொற். கோயிலில் முதல் பாட்டாகிய காப்பு, விநாயகப்பெரு, ம்ான் எழுந்தருளி இருக்கும் இடம் என்று சொல்ல லாம். துவார கணபதியைத் தரிசனம் செய்து வைத்த அருணகிரியார் மெல்லக் கந்தர் அநுபூதித் திருக்கோயிலுக்குள் அழைத்துச் செல்கிருர். அநுபூதியாகிய இந்த நூல் அருணகிரிகாதப் பெருமானுடைய வாக்குச்சிறப்பை நன்கு எடுத்துக் காட்டுவது; அவருடைய அநுபவத்தையும் தன் னுள்ளே பொதிந்துள்ளது. சிறந்த புலவராகிய அருணகிரிநாதப் பெருமானுடைய திருவாக்கு ஆத லின் செஞ்சொல் கவி இன்பம் இதில் நிறைந்திருக்கும்; செஞ்சொற் புனை மாலை" என்று அருணகிரிகாதரே காப்புப் பாட்டில் சொன்னர் அல்லவா? அதோடு, அநுபூதியைச் சொல்கின்ற நுட்பமான பகுதிகளும் இருக்கும். புலமை கலமும், அநுபவ கலமும் ஒருங்கே அமைந்த கந்தர் அநுபூதியின் முதல் பாட்டை இப்போது பார்க்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/121&oldid=855718" இலிருந்து மீள்விக்கப்பட்டது