பக்கம்:ஞான மாலை.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ஞான மாலே சொற்கோயில் கோயிலுக்குள் நுழையும்போது வெளியில் துவார கணபதியைப் பார்த்து வணங்கிவிட்டோம். பிராகாரத்திற்குள் நுழைந்து உள்ளே புகுந்தால் முதலில் பலி பீடம் நிற்கும். அந்தப் பலி பீடத்திற்கு அப்பால் கொடி மரம் கிற்கும். அதற்கப்பால் ஆண்டவ. அடைய வாகனம் இருக்கும். முருகப்பெருமானுடைய திருக்கோயிலில் வேலையும் கட்டு வைத்திருப்பார்கள். கந்தர் அதுபூதியாகிய செஞ்சொற் கோயிலுக் குள் அழைத்துப் போகும் அருணகிரியார் அந்தக் கோயில் வாசலில் எழுந்தருளியிருக்கும் துவார கண பதிக்கு வணக்கம் செலுத்திவிட்டு, உள்ளே உள்ள வற்றைக் காட்டுகிருர், "இதோ பார்; ஆண்டவ னுடைய வாகனமாகிய ஆடும் பரி. இருக்கிறது. இங்கே கட்டிருக்கிற வேலையும் பார். சற்றே அண் ளுந்து பார்; அந்தப் பெருமானுடைய சேவல் கொடி பறக்கிறது” என்று சொல்வாரைப் போலச் செய்தி களை அமைக்கிருர், ஆடும் பரிவேல் அணிசே வல்எனப் பாடும் பணியே பணியா அருள்வாய்; தேடும் கயமா முகனைச் செருவில் சாடும் தனியா னசகோ தரனே! 'கயமுகாசுரனைப் போர்க்களத்தில் எதிரிட்டு அவ னைச் சங்காரம் பண்ணின மகாகணபதியின் சகோ தரனே, பிரணவ சொரூபமாகிய மயில் வாகனம், திருக்கரத்திலுள்ள ஆயுதமாகிய வேல், அழகு செய்கிற கொடியாகிய சேவல் என்று சொல்லிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/122&oldid=855719" இலிருந்து மீள்விக்கப்பட்டது