பக்கம்:ஞான மாலை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 ஞான மாலை. அவர்கள் வாயிலாகச் சீட்டை உள்ளே அனுப்பி, அங்கே இருந்து அநுமதி வந்தவுடன் உள்ளே புக வேண்டும். எத்தனைக்கு எத்தனை காவல் முதலியன இருக்கின்றனவோ அத்தனைக்கு அத்தனை உள்ளே இருப்பவர்களுடைய மதிப்பு அதிகமாகிறது. சாதா ரண அதிகாரியின் கிலேயே இப்படியென்ருல் உலகத் திற்கெல்லாம் தனித் தலைவனுக இருக்கும் ஆண்ட வன் எவ்வளவு சிறந்த கெளரவத்தோடு இருப்பான்! நமக்கு எவ்வளவு வேண்டிய அன்பராக இருந்தா லும் அவர் வீட்டுக்குப் போகும்போது தடபுடலாக கேரே அவரைப் பார்ப்பதற்குச் செல்வது தக்கது. அன்று. அவர் வீட்டில் உள்ளோரிடம் மரியாதை இல்லாமல் வேகமாகச் சென்ருல் அவர்கள் கம்மை விரும்பமாட்டார்கள். வீட்டுக்குடை யார் அதை அறிந்தால் வெளிப்படையாக நம்மிடம் சொல்லாவிட் டாலும், இவனுக்கு மரியாதை தெரியவில்லையே!” என்று கினைப்பார். யாரிடத்தில் காம் அன்பு வைக் கின்ருேமோ அவரைச் சார்ந்தவரிடமும் அன்பு பாலிப் பதுதான் நல்ல முறை. அந்த வகையில் முருகப் பெருமானிடத்தில் மீதுர்ந்த அன்புடைய அருணகிரி யார் அங்தப் பெருமானுடன் சார்ந்த மயிலையும், வேலையும், கொடியாகிய சேவலையும் பாடுகிருர். கந்தர் அலங்காரத்திலும் அவற்றைப் பற்றி அவர் பாடிய பாடல்களைப் பார்த்தோம். திருவகுப்பில் மயில் வகுப்பு, வேல் வகுப்பு ஆகிய இரண்டும் உண்டு. வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம் என்று தனிப் பிரபந்தங்களை அருணகிரியார் பாடி, யிருக்கிருர், ' ' . - - " . . ;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/124&oldid=855721" இலிருந்து மீள்விக்கப்பட்டது