பக்கம்:ஞான மாலை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடும் பணி 107° பல வகையான அங்கங்களை உடையவன் அரசன். அங்கங்கள் அதிகமாக அதிகமாக அரச னது பெருமையும் அதிகமாகும். முருகப்பெருமான் பல அங்கங்களை உடையவன். மயில் முதலியன அவனுடைய மதிப்பை விளக்கும் அங்கங்கள். சிறந்த மதிப்புடைய பெருமாளுகையில்ை அவனுடைய அங்கங்களுக்கும் கல்ல சிறப்பு இருக்கும். அரசன் ஒரு தனி மனிதன்தான். அவனுக்குரிய பதவியை அவன் உருவத்தைக் கண்டு நாம் கான முடியாது. அவனும் நம்மைப் போல இரண்டு கையும், காலும் உடைய மனிதன். நம்மைப் போல அவனும் வீதியில் நடந்து போனுல் அவனே யாரும் மதிக்க மாட்டார்கள். அவன் சாலையில் நடந்து செல்லும் போது முன்னுல் நூறு பேர்கள் செல்ல, பக்கத்தில் பலர் சூழ, பின்னல் ஒரு பெரும் படை சென்ருல் அவன் பெருமையை நாம் உணர்ந்து கொள்கிருேம். உலகத்திற்கு நாயகனுக இருக்கும் ஆண்டவன் பெரு மையை அவனுடைய ஆலயத்தில் பார்க்கிருேம். அவன் இருப்பது கர்ப்பக்கிருகங்தான். ஆளுல்அவனைச் சுற்றிப் பல பரிவார தெய்வங்கள் இருக்கின்றன. ஆவரணங்கள் இருக்கின்றன. கோயிலின் பெருமை இத்தகைய அமைப்புக்களால் மிகுதியாகிறது. அங்கங்களைக் கண்டு பின்பு அங்கியைக் காணுவது முறை. அந்த வகையில் அருணகிரிநாதப்பெருமான் இந்தச் செஞ்சொற் கோயிலுக்குள் நுழைந்தவுடனே அவனுடைய வாகனம் முதலியவற்றை முதலில் பணிகிருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/125&oldid=855722" இலிருந்து மீள்விக்கப்பட்டது