பக்கம்:ஞான மாலை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 10 ஞான மாலே என்பது அப்பர்சுவாமிகளுடைய திருவாக்கு. மந்திரங் களின் தொகுதியாகிய வேதம் முதலில் பிரணவத்தை உடையது. ஓம் என்று தொடங்கி ஓம் என்று முடிகிறது. ஓங்காரம் எல்லா மந்திரங்களுக்கும் மூல மானது. எல்லா ஒலிகளுக்கும் ஆதியானது. அது அகார உகார மகாரம் இணைந்தது. அகாரம் சிருஷ்டி யையும், உகாரம் காப்பையும், மகாரம் சங்காரத்தை யும் குறிக்கும். அ என்னும்போது வாயைத் திறக் கிருேம்; அது பிரபஞ்ச சிருஷ்டியாகிய தோற்று வாயைக் குறிக்கிறது. உ என்னும்போது வாய் குவிகிறது; பிரபஞ்சத்தில் இது தம் தம் செயலைத் சரியான முறையில் நடத்துகிற காப்பைக் குறிக் கிறது. மகாரத்தைச் சொல்லும்போது வாய் மூடு கிறது; அது சங்காரத்தைக் குறிக்கிறது. இப்படி மூன்று தொழிலையும் அறிகுறியாகக் குறிக்கின்ற அகார, உகார, மகாரங்களின் சேர்க்கையே பிரணவம் என்று சொல்வார்கள். வேதங்களில் பல வகையான மங் திரங்கள் உண்டு. அவற்றையெல்லாம் ஓம் என்று சொல்லித் தொடங்குவார்கள். ஒவ்வொரு மூர்த்தியினுடைய மந்திரத்துக்கும் பிரணவமே முதலாக கிற்கும். துறவிகள் பிரணவத்தைச் சொல்லித் தியானம் பணணுவாாகள. - தமிழில் சைவர்கள் வேதம் என்று போற்றுவது தேவாரம். தேவாரத்தின் முதல் மூன்று திருமுறை களும் ஞானசம்பந்தப் பெருமான் திருவாய் மலர்க் தருளியவை. எம்பெருமாட்டி கறந்து அருத்திய ஞானப் பாலை உண்ட அந்தப் பெருமான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/128&oldid=855728" இலிருந்து மீள்விக்கப்பட்டது