பக்கம்:ஞான மாலை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 காட்சி, கொண்டதே கோலமாகத் திரிந்து, உலகியலின் பமே பெரிதாக மயங்கி யிருத்தல் வேண்டும். பல பல சிற். றரசர்கள்தோம் பொருளும் பதவியும் பெற்றதற்குப் பயன் உலக இன்பத்தை முழுமூச்சாக நுகர்வதே என்றெண்ணி, அப்படியே வாழ்ந்தார்கள். இவற்றை யெல்லாம் கண்ட அருணகிரிநாத முனிவர் அவர்கள் வாழ்க்கையை வெறுத் தார், உலகத்தவர் குற்றங்களேத் தம்மேல் ஏ ற ட் டு க் கொண்டு பாடினர். - அருணகிரியார் தமிழில் புலமை பெற்றிருந்ததோடு வடமொழியிலும் கல்லறிவு வாய்ந்திருந்தவர். அவருடைய பாடல்களில் வடமொழி மிகுதியாக விரவி வருகின்றது. சேர்ந்தாற்போல் பல வடமொழிச் சொற்ருெடர்களைத் தொடுத்துப் பாடியிருக்கிருர், கந்தர் அநுபூதியிலும் அருணகிரியாருக்கே உரிய பொது இயல்புகள் பலவற்றைக் காணலாம். . வாந்தோறும் கந்தர் அநுபூதியில் ஒரு பாட்டுக்கு. விளக்கவுரை சொல்லும் வாய்ப்பு எனக்கு மூன்று முறை. கிடைத்தது. முதலில்கந்தசாமிகோயில் மெத்தை மண்டபத். திலும் அப்பால்சிந்தாதிரிப்பேட்டையிலும்பின்பு மாம்பலத். திலும் அநுபூதி விரிவுரை யாற்றினேன். தேனம்பேட்டை. யில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூன்று ஆண்டுகள் கந்தர் அலங்கார விரிவுரையை ஆற்றிய பிறகு கந்தர் அநுபூதி விரிவுரையை நான்காம் முறையாக ஆற்றத் தொடங்கினேன். அருள்வாக்காதலின் அதில் ஆழ: ஆழப் புதிய புதிய கருத்துக்கள் தோன்றின. வரவர அருணகிரியார்பால் உள்ள மதிப்புப் பெருகி வருகிறது. 1959-ஆம் ஆண்டு பிப்ரவரிமாதம் 5-ஆம் தேதி இந்த விரிவுரை தொடங்கியது. அது முதல் ஒவ்வொரு வியாழ. னன்றும் நடைபெற்று வருகிறது அலங்கார விரிவுரைகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/13&oldid=855732" இலிருந்து மீள்விக்கப்பட்டது